தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட்டிலும் ஐபிஎல் டி20-யிலும் சிறப்பாக ஆடிவரும் ராபின் உத்தப்பா இந்திய அணியில் நுழைய ஆரவமிகுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈஎஸ்பிஎன் - கிரிக்இன்ஃபோ இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
"இந்திய அணிக்கு நான் ஆடிய போது ஒரே நிலையான பேட்டிங் நிலையில் நான் 3 இன்னிங்ஸ்களுக்கு மேல் ஆடியதேயில்லை. எனவே ஒரே பேட்டிங் நிலையில் எனக்கு 10 அல்லது 7 அல்லது 5 போட்டிகளை அளித்துப் பாருங்கள் அங்கிருந்து என்னை மாற்ற வேண்டிய தேவை ஏற்படாது என்ற உறுதியை நான் அளிக்கிறேன்.
ஜாக் காலிஸ் போன்ற ஒருவர் நான் சிறப்பாக ஆடுவதாகவும் அனைத்தையும் நான் சரியாகச் செய்வதாகவும், உத்தி ரீதியாக இந்தியாவில் தற்போது நானே சிறந்த பேட்ஸ்மென் என்றெல்லாம் கூறும்போது எனக்கு தன்னம்பிக்கை பீறிட்டு எழுகிறது. அவர் என்னிடம் கூறும்போது, ‘என்னைத் தனிப்பட்ட முறையில் கேட்டால், நீதான் (உத்தப்பாதான்) தற்போது சிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவர், தலைசிறந்த பேட்ஸ்மென் என்றில்லாவிட்டாலும் தற்போது நாட்டில் உள்ள வீரர்களில் நீ சிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவன்’ என்று கூறினார்.
ஜிம்பாப்வே அணிக்கு வீர்ர்கள் தேர்வு செய்யப்படும்போது நான் எனக்கான வாய்ப்பை எதிர்நோக்குகிறேன். தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கவும் எதிர்பார்க்கிறேன்.
கடந்த முறை ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய அணியில் ஆடிய போது 3-வது, 5-வது நிலைகளில் ஒருநாள் போட்டியிலும் டி20-யில் 3-ம் நிலையிலும் களமிறங்கினேன். ஆனால் ஒரு தொடக்க வீரர். நான் ஆண்டு முழுதும் தொடக்க வீரராகவே ஆடி வருகிறேன். ஆனால் இங்கு நிலைகள் மாறிக் கொண்டேயிருக்கின்றன.
சமீபத்தில் தோனி கூறியது இது: உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டுக்கு தாவும் போது அது கிரிக்கெட் தரநிலையிலான மாற்றம். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு வரும்போதும் சரி செய்து கொள்ள சிலகாலம் தேவைப்படுகிறது. எனவே வீரர்களுக்கு 5 அல்லது 6 வாய்ப்புகள் வழங்கவேண்டும், என்றார், இதையேதான் யுவராஜ் சிங் சில காலம் முன் தெரிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மென் சீரான முறையில் திறமையை நிரூபிக்க கணிசமான வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
தேர்வாளர்களிடம் நேரடியாக பேச முடியாதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த உத்தப்பா, “ரஞ்சி டிராபியில் நாக் அவுட்டுக்கு கர்நாடகா தகுதி பெறவில்லை. ஆனால் நான் லீக் ஆட்டங்களில் அதிகரன்கள் எடுத்த பட்டியலில் 2-வது இடத்தில் இருந்தேன். ஆனாலும் இரானி கோப்பைப் போட்டிக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை.
என்னைப் பொறுத்தவரை இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவதே குறிக்கோள். ஆனால் எனது ஆட்டங்கள், எடுத்த ரன்கள் கவனிக்கப்படாமல் போகும்போது எங்கு தவறு நிகழ்கிறது என்றும் நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால் இந்திய அணிகாக ஆடும் தீராத தாகம் என்னிடம் உள்ளது.
நான் சில வெற்றிகளில் பங்களிப்பு செய்திருக்கிறேன், அது எவ்வகையான் உணர்வு என்பதை நான் அறிவேன். 4 ஆண்டுகளுக்கு முன்பாக நான் அந்த நிலையில் இல்லை, ஆனால் இப்போது தயாராகிவிட்டேன்.
கடந்த ஜிம்பாப்வே தொடரில் டி20களில் நான் அதிக ரன்கள் எடுத்தவனாக இருந்தேன் ஆனால் அதன் பிறகு நான் தேர்வு செய்யப்படவில்லை” என்றார் ராபின் உத்தப்பா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
35 mins ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago