பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
174 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இணை பவர் பிளே முடியும்வரை நீடித்தது. 6 ஓவர்களில் 50 ரன்களை கடந்த போது ருதுராஜ் கெய்க்வாட் 28 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக நடையை கட்டினார். அடுத்த சில நிமிடங்களில் ராபின் உத்தப்பா ஒரு ரன்னோடு அவுட் ஆக, அம்பதி ராயுடுவும் 10 ரன்களோடு இன்னிங்ஸை முடித்துக்கொள்ள சென்னை அணி அதிர்ச்சியில் மூழ்கியது.
75 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்கள் இழந்து தடுமாறிய சென்னை அணிக்கு கான்வே மற்றும் மொயீன் அலி இணைந்து சில ஓவர்கள் ரன்களை சேர்ந்ததனர். 15வது ஓவரில் கான்வே 56 ரன்களுக்கும், 17வது ஓவரில் மொயீன் அலி 34 ரன்களுக்கும் அவுட் ஆக, தோனி உள்ளிட்ட பின்வரிசை வீரர்கள் சோபிக்க தவறினர். டுவைன் பிரிட்டோரியஸ் மட்டும் இரட்டை இலக்கத்தை தொட மற்ற பின்வரிசை வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னோடு வருவதும் போவதுமாக இருந்தனர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பெங்களூரு தரப்பில் ஹர்சல் படேல் அதிகபட்சமாக 3 விக்கெட்டும், மேக்ஸ்வெல் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
» IPL 2022 | சென்னை அணிக்கு 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு
» IPL 2022 | பெங்களூரு அணிக்கு எதிராக சென்னையின் கை சற்று ஓங்கியிருக்கும் - இம்ரான் தாஹிர்
பெங்களூரு இன்னிங்ஸ்: டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பவுலிங் தேர்வு செய்தார். பெங்களூரு அணிக்காக விராட் கோலி மற்றும் டூப்ளசி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
டூப்ளசி, 22 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து மேக்ஸ்வெல் மற்றும் கோலி அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை இழந்தனர். இருந்தும் ரஜத் பட்டிதர் மற்றும் மஹிபால் லோம்ரோர் 44 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது அந்த அணிக்கு முக்கிய கூட்டணியாக அமைந்தது. 15 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட்டானார் பட்டிதர். 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட்டானார் லோம்ரோர்.
தினேஷ் கார்த்திக், 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது பெங்களூரு. சென்னை அணிக்காக மஹீஷ் தீக்ஷனா (3 விக்கெட்), மொயின் அலி (2 விக்கெட்) மற்றும் பிரிட்டோரியஸ் (1 விக்கெட்) கைப்பற்றி இருந்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago