மும்பை: தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக்.
நடப்பு சீசனில் சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். அவரும் சென்னை விளையாடிய முதல் எட்டு போட்டிகளில் அணியை வழிநடத்தினார். அதில் இரண்டு போட்டிகளில் மட்டுமே சென்னை வெற்றி பெற்றிருந்தது. அண்மையில் கேப்டன் பொறுப்பை துறந்தார் ஜடேஜா. அதோடு மீண்டும் தோனி வசம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். தோனி தலைமையில் நடப்பு தொடரில் களமிறங்கிய சென்னை அணி முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது.
இந்நிலையில், தோனியின் தலைமையின் கீழ் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார் சேவாக்.
"கடந்த 2005 முதல் தோனி எனும் மனிதனுடன் நான் பயணித்துள்ளேன். அவரது தலைமையிலான இந்திய அணி நிறைய மாற்றங்களை சந்தித்ததை நான் பார்த்துள்ளேன். அந்த மாற்றங்கள் மூலம் ஐசிசி நாக்-அவுட், சொந்த மண்ணில் நடைபெற்ற தொடர்களை இந்தியா வென்றது. தோல்விகள் அனைத்தும் வெற்றிகளாக மாறின. அதனால் அதை மனதில் வைத்து இதனை நான் சொல்கிறேன். சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம். அது நடக்கலாம். வரிசையாக ஆறு வெற்றிகளை சென்னை குவிக்கலாம்" என தெரிவித்துள்ளார் சேவாக்.
» ஐபிஎல் களத்தில் அதிவேக 1000 ரன்கள்: சச்சின் சாதனையை சமன் செய்த ருதுராஜ்
» விம்பிள்டனில் ரஷ்ய, பெலாரஸ் வீரர்களுக்கு தடை | "இது அநியாயம்" - நடால், ஜோகோவிச் காட்டம்
சென்னை அணி பெங்களூரு, டெல்லி, மும்பை, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக நடப்பு சீசனில் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடவுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago