ஐபிஎல் களத்தில் அதிவேக 1000 ரன்கள்: சச்சின் சாதனையை சமன் செய்த ருதுராஜ்

By செய்திப்பிரிவு

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் களத்தில் அதிவேகமாக 1000 ரன்களைக் குவித்த பேட்ஸ்மேன் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடக்க வீரராக விளையாடி வருபவர் ருதுராஜ் கெய்க்வாட். 25 வயதான அவர் புனேவை சேர்ந்தவர். கடந்த 2020 முதல் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். 2020 சீசனில் வெறும் ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடினார் ருதுராஜ். ஆனால் 2021 சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 635 ரன்களை குவித்தார். கடந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனும் அவர் தான்.

இருந்தாலும் நடப்பு சீசனில் ரன் சேர்க்க அவர் கொஞ்சம் தடுமாறினார். 9 போட்டிகளில் விளையாடி 237 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் ருதுராஜ். இதில் இரண்டு அரை சதங்கள் அடங்கும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற நடப்பு சீசனின் 46-வது லீக் போட்டியில் 57 பந்துகளில் 99 ரன்களை சேர்த்திருந்தார். இந்தப் போட்டியில் அவர் 24 ரன்களை எடுத்த போது ஐபிஎல் கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் இடம் பிடித்தார்.

மொத்தம் 31 இன்னிங்ஸ் விளையாடி இந்த 1000 ரன்களை எடுத்துள்ளார் ருதுராஜ். இதற்கு முன்னதாக ஐபிஎல் களத்தில் முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் 31 இன்னிங்ஸில் 1000 ரன்களை எடுத்திருந்தார். இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களை குவித்த பேட்ஸ்மேன் ஆகியுள்ளார் ருதுராஜ்.

ஐபிஎல்லில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த கிரிக்கெட் வீரர்கள்

>சச்சின் டெண்டுல்கர் - 31 இன்னிங்ஸ்
>ருதுராஜ் கெய்க்வாட் - 31 இன்னிங்ஸ்
>சுரேஷ் ரெய்னா - 34 இன்னிங்ஸ்
>ரிஷப் பந்த் - 35 இன்னிங்ஸ்
>தேவ்தத் படிக்கல் - 35 இன்னிங்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்