காயத்தினால் பாதிக்கப்பட்டு அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்து வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கமின்ஸ் தற்போது முழுமையாக குணமடைந்து விட்டார்.
விரைவில் அஸ்திரேலியா ஏ அணிக்காக பேட் கமின்ஸ் மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்குரிய பந்தில் வீச வருகிறார் என்று அவர் காயத்திலிருந்து மீளவும் தனது பழைய வேகப்பந்து வீச்சை மீண்டும் பெறவும் உதவிய வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
பேட் கமின்ஸ் ஓடிவந்து பந்தை வீசும் விதம் காயங்கள் ஏற்பட பெரும் காரணமாக அமைந்ததையடுத்து ரியான் ஹாரிஸ் அவரது பந்து வீச்சு முறையில் புதுமையைப் புகுத்தியுள்ளார்.
ஒரு முறை இங்கிலாந்தின் பிளிண்டாஃப் காயத்திலிருந்து தப்ப வழி தெரியாது தடுமாறிய போது, ஆலன் டோனல்டு அவருக்கு உதவி புரிந்தார். அதாவது பந்து வீசும் போது முன்னங்காலை நன்றாகத் தூக்கி தரையில் அடிப்பதும், அப்போது வலது கால் பாதம் பக்கவாட்டில் திரும்பியிருப்பது பிளிண்டாஃப் காயங்களுக்கு பிரதான காரணம் என்று கண்டறிந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டோனல்டு, முன்னங்காலை அதிகம் தூக்காமல் நேராக வைத்துக் கொள்ளவும், வலது பாதம் பக்கவாட்டில் திரும்பாமல் அதுவும் பந்து வீசும் போது நேராக வருமாறு திருத்தி அமைத்தார். அதன் பிறகே அவர் ரிவர்ஸ் ஸ்விங்கில் பெரிய அளவுக்கு உலக வீரர்களை அச்சுறுத்தினார். ஆஸ்திரேலியாவை படுத்தி எடுத்தார் பிளிண்டாஃப்.
தற்போது இந்தக் கோணத்தில்தான் பேட் கமின்ஸ் அடிக்கடி காயமடையாமல் இருக்கவும் ஆனால் வேகத்தைக் குறைக்காமல் வீசவும் ரியான் ஹாரிஸ் உதவி புரிந்துள்ளார்.
இந்நிலையில் பேட் கமின்ஸ் குறித்து ரியான் ஹாரிஸ் கூறும்போது, “அவரால் இன்னமும் என்ன முடியும் என்பதை நினைக்கும் போது அச்சமூட்டுவதாக உள்ளது. அவரிடம் அச்சமூட்டும் ஒரு திறமை உள்ளது.
ஒருநாள் போட்டிகளில் அவர் ஓடி வந்து நல்ல வேகத்துடன் வீசியதைப் பார்த்தோம்.
நிச்சயம் இப்போது புத்துணர்வு பெற்று புதிய பந்து வீச்சு முறையுடன் களம் காணும் பேட் கமின்ஸ், ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகத் திகழ்வார். அதுவும் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஜேம்ஸ் பேட்டின்சன் ஆகியோருடன் இவரும் சேர்ந்தால் எந்த ஒரு அணியும் ஆஸ்திரேலிய அணியை சந்திக்க அச்சங்கொள்ளும்.
பந்து வீச்சில் ஆக்ஷன் சரிவர அமையவில்லையெனில் காயங்கள் ஏற்படுவது இயல்பு. ஆனால் தற்போது புத்துணர்வு பெற்று ஆஸ்திரேலிய அணிக்காக ஆட முழு உற்சாகத்துடன் தயாராகவுள்ளார் கமின்ஸ்” என்றார் ரியான் ஹாரிஸ்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
40 mins ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago