IPL 2022 | சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை தோனியிடம் ஒப்படைக்கிறார் ஜடேஜா!

By செய்திப்பிரிவு

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை தோனியிடம் ஜடேஜாஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த அறிவிப்பு சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அதிரடி அறிவிப்பை அறிவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதாவது, அணியின் கேப்டன் பொறுப்பை ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கவனிப்பார் என அதில் தெரிவிக்கப்பட்டது. அதன்படியே அவரும் நடப்பு சீசனின் முதல் 8 போட்டிகளில் வழிநடத்தினார். அதில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பதிவு செய்தது சென்னை. தோனி, அனுபவ வீரராக களத்தில் ஜடேஜாவுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

இந்நிலையில், தனது கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகுவதாகவும். கேப்டன் பொறுப்பை தோனி வசம் ஒப்படைத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஆல்-ரவுண்டரான ஜடேஜா நடப்பு சீசனில் பேட்டிங், பவுலிங் என எதிலுமே சோபிக்கவில்லை. அதே நேரத்தில் சிறந்த ஃபீல்டரான அவர் கேட்ச்களையும் தவறவிட்டார். கேப்டன் பொறுப்பு கொடுத்த அழுத்தம் காரணமாக ஜடேஜா அந்த பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருக்கலாம் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்