உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி-16 நாக் அவுட் சுற்றுக்கு மெக்சிகோ அணி முன்னேறியது. குரேஷியாவை அந்த அணி 3-1 என்று வீட்டுக்கு அனுப்பியது.
அருமையான தடுப்பு அரணையும் உலகின் தலை சிறந்த கோல் கீப்பராக எழுச்சியுற்ற ஓச்சாவையும் வைத்திருக்கும் மெக்சிகோ சிறந்ததொரு எதிர்த் தாக்குதல் ஆட்டத்தில் ஆக்ரோஷமான குரேஷியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
அடுத்த நாக் அவுட் சுற்றில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் நெதர்லாந்தை, மெக்சிகோ அணி சந்திக்கிறது.
குரேஷியா அணி எப்படியாவது அடுத்த சுற்றுக்குள் சென்று விடவேண்டும் என்று ஆடியது. இதனால் மெக்சிகோ வீரரிடம் மோதல் போக்கைக் கையாண்டது. மெக்சிகோ வீரர் ஆந்த்ரே குவார்டாடோவை குரேஷிய வீரர் நெஞ்சினால் மோதினார்.
இடைவேளை வரை கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. இடைவேளைக்குப் பிறகு 70வது நிமிடத்தில் மெக்சிகோவின் அனுபவ வீரர் ஜேவியர் ஹெர்னாண்டஸ் களமிறங்க அதற்கு அடுத்த 2வது நிமிடத்தில் ஆட்டத்தில் உத்வேகம் கூடியது. மெக்சிகோ வீரர் ரஃபேல் மார்க்வேஸ் தலையால் முதல் கோலை அடிக்கிறார்.
75வது நிமிடத்தில் மீண்டும் மெக்சிகோ அணியின் ஆந்த்ரேஸ் குவார்டாடோ ஒரு எதிர்த்தாக்குதல் ஆட்டத்தில் 2வது கோலை அடிக்க, ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் ஹெர்னாண்டஸ் வெற்றி கோலை அடித்தார். தலையால் அடித்த சக்தி வாய்ந்த ஷாட் ஆக அது அமைந்தது.
87வது நிமிடத்தில் குரேஷிய வீரர் இவான் பெரிசிச் ஆறுதல் கோல் அடித்தார்.
பிரேசில் அணியை கோல் அடிக்க விடாமல் செய்ததில் தன்னம்பிக்கை பெற்ற மெக்சிகோ அணி இடைவேளைக்கு முன்பாக தனது அபாரமான தடுப்பு அரண் மூலம் குரேஷியா ஏற்படுத்திக் கொண்ட அரை வாய்ப்புகளையும் ஒன்றுமில்லாமல் செய்தது. பெரிசிச் மட்டுமே ஒரு கோல் முயற்சி செய்தார், அதாவது கோலுக்கு அருகிலிருந்து, ஆனால் கோல் விழவில்லை.
ஆட்டம் தொடங்கி 15வது நிமிடத்தில் மெக்சிகோ விரர் ஹெக்டர் ஹெரேரா, தூரத்திலிருந்து இடது காலால் பந்தைத் தூக்கி அடிக்க அது கோல் போஸ்ட்டின் மேல் பகுதியில் பட்டு நூலிழையில் இலக்கைத் தவற விட்டது.
இடைவேளைக்குப் பிறகு மெக்சிகோவின் ஆட்டத்தில் புது வேகம் புகுந்தது. ஒரு பெனால்ட்டி முறையீடும் செய்தனர். ஆனால் பலன் இல்லை.
அதன் பிறகே ஹெர்னாண்டஸ் இறங்குகிறார். இறங்கிய 2வது நிமிடத்தில் கேப்டன் மார்க்வேஸ் இடது புறமிருந்து வந்த ஒரு அருமையான பாஸை நன்றாக எம்பி தலையால் முட்டிக் கோலுக்குள் செலுத்தினார்.
75வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் குவார்டாடோ மார்க் செய்யப்படாமல் தனித்து விடப்பட அவர் அதனை அபாரமான எதிர்த் தாக்குதல் ஆட்டத்தில் கோலுக்கு அருகே கொண்டு வந்து குரேஷிய கோல் கீப்பர் பிளெடிகோசாவைத் தாண்டி அடித்து கோலாக மாற்றினார்.
அதன் பிறகு 82வது நிமிடத்தில் கேப்டன் மார்க்வேஸ் கொடுத்த பாஸை ஆளில்லாத கோலில் ஹெர்னாண்டஸ் பந்தைத் தலையால் உள்ளே தள்ளினார்.
கடைசி 20 நிமிடங்கள் மெக்சிகோ உத்வேகம் கொண்டு ஆடவில்லையெனில் குரேஷியா தங்களது ஆக்ரோஷத்தின் மூலம் அந்த ஒரு கோலை அடித்து வெற்றியைக் கூட சாதித்திருக்கும், ஆனால் ஹெர்னாண்டஸ் களம் கண்டு புதிய உத்வேகத்தைக் கொடுக்க மெக்சிகோ அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
முதலிடம் பிடித்திருந்தால் சிலியை மெக்சிகோ சந்தித்திருக்கும் ஆனால் பிரேசில் அணி கோல் வித்தியாச அடிப்படையில் முதலிடம் பிடித்ததால் மெக்சிகோ அணி பலமான நெதர்லாந்து அணியை நாக் அவுட் சுற்றில் சந்திக்க நேர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago