IPL 2022 | அபிஷேக் ஷர்மா அதிரடி - குஜராத் அணிக்கு 196 ரன்கள் இலக்கு

By செய்திப்பிரிவு

மும்பை: குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை சேர்த்தது.

ஐபிஎல் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய 40-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணிக்கு அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் இணை துவக்கம் கொடுத்தது. 2-வது ஓவரில் இந்த இணையை முஹம்மது ஷமி பிரித்தார். 5ரன்களை சேர்த்திருந்த கேன் வில்லியம்சன் போல்டாகி வெளியேறினார்.

அடுத்த 5-வது ஓவரிலேயே ராகுல் திரிபாதியும் 16 ரன்களில் நடையைக் கட்டினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 42 பந்துகளில் 65 ரன்களை குவித்த அபிஷேக் சர்மா அல்சாரி ஜோசப் பந்தில் போல்டானார். எய்டன் மார்க்ராம் 56 ரன்களும், நிகோலஸ் பூரான் 3 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 3 ரன்களிலும் ஆட்டமிழக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழப்பிற்கு 195 ரன்களை குவித்தது குஜரானத் டைட்டன்ஸ்.

சன்ரைசர்ஸ் அணி தரப்பில் முஹம்மது ஷமி 3 விக்கெட்டுகளையும், யஷ் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்