IPL | ’150 விக்கெட்டுகளை வீழ்த்திய 5-வது சுழற்பந்து வீச்சாளர்’ - அஸ்வின் சாதனை

By செய்திப்பிரிவு

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் அஸ்வின்.

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூரு அணிக்கு எதிரான 39-வது லீக் ஆட்டத்தில் அஸ்வின் விளையாடினார். இந்தப் போட்டியில் அவர் கைப்பற்றிய முதல் விக்கெட் மூலம் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். அஸ்வின் இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பெங்களூரு வீரர் ராஜாத் பட்டிதர் தான் அஸ்வினின் 150-வது ஐபிஎல் விக்கெட். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஐந்தாவது சுழற்பந்து வீச்சாளர் ஆகியுள்ளார்.

முன்னதாக, அமித் மிஸ்ரா (166 விக்கெட்டுகள்), பியூஷ் சாவ்லா (157 விக்கெட்டுகள்), சாஹல் (157 விக்கெட்டுகள்), அஸ்வின் (152 விக்கெட்டுகள்), ஹர்பஜன் சிங் (150 விக்கெட்டுகள்) ஆகியோர் கைப்பற்றியுள்ளனர். தற்போது இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார் அஸ்வின்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் மொத்தம் 8 பவுலர்கள் 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ 181 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களில் முதலிடத்தில் உள்ளார். 150 விக்கெட்டுகள் கைப்பற்றிய பவுலர்கள் வரிசையில் கொல்கத்தாவின் சுனில் நரைன் விரைவில் இணைய வாய்ப்புள்ளது. தற்போது அவர் 149 விக்கெட்டுகளை ஐபிஎல் அரங்கில் கைப்பற்றியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்