ஹாக்கியில் தமிழக காவல்துறை அணி வெற்றி

By செய்திப்பிரிவு

சென்னை: தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் தமிழக காவல் துறை அணி, பாண்டிச்சேரியை வீழ்த்தியது.

செயிண்ட் பால் – சார்லஸ் அப்பாதுரை நினைவு தென் மண்டல ஆடவருக்கான ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள எஸ்டிஏடி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழக காவல்துறை – லே பாண்டிச்சேரி அணிகள் மோதின. இதில் தமிழக காவல்துறை 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழக காவல்துறை அணி சார்பில் எம்.விஜய், எஸ்.ராஜா ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் சாய் சென்னை 5-1 என்ற கோல் கணக்கில் ஆக்ஸிலேட்டர்ஸ் கேரளா அணியை தோற்கடித்தது. சாய் அணி தரப்பில் அபிஷேக், எம்.துஸ்வால், டி.சஞ்ஜெய், ஜி.அபிஷேக், ரோஷன் பெர்ணான்டஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இன்று நடைபெறும் ஆட்டங்களில் செயிண்ட் பால் சென்னை – கோவில்பட்டி எஸ்டிஏடி அகாடமி, தமிழ்நாடு ஹாக்கி அகாடமி – சென்னை கார்ப்பரேட், சாய் சென்னை – ராணிப்பேட்டை அர்ஜூன் ஹாக்கி கிளப் அணிகள் மோதுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்