ஐபிஎல் கிரிக்கெட்டில் 6,000 ரன்களைக் கடந்த 2-வது பேட்ஸ்மேன் ஆனார் ஷிகர் தவான்

By செய்திப்பிரிவு

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் 6,000 ரன்களை கடந்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் ஷிகர் தவான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியின்போது இந்தச் சாதனையை அவர் படைத்தார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். இந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் இரண்டு அரைசதங்களை பதிவு செய்துள்ளார். இதுவரையில் 202 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெல்லி, மும்பை, டெக்கான் சார்ஜர்ஸ், ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் என வெவ்வேறு அணிக்காக ஐபிஎல் அரங்கில் கிரிக்கெட் விளையாடியுள்ளார் தவான்.

இதன் மூலம் 6000 ரன்களை கடந்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை அணிக்கு எதிரான நடப்பு சீசனின் 38-வது லீக் போட்டியில் அவர் முதல் 2 ரன்கள் எடுத்த போது இந்த மைல்கல்லை அவர் எட்டினார். இந்தப் போட்டியில் அரைசதம் கடந்திருந்தார். 59 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து இறுதி வரை அவர் அவுட்டாகாமல் விளையாடினார். இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் 6000 ரன்களை கடந்த இரண்டாவது பேட்ஸ்மேன் ஆகியுள்ளார் அவர்.

முன்னதாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி 215 போட்டிகள் விளையாடி 6,402 ரன்கள் எடுத்து ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரராக உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்