'பல ஜாம்பவான்கள் இதனைக் கடந்து வந்துள்ளனர்' - தொடர் தோல்வி குறித்து ரோகித் சர்மா ட்வீட் 

By செய்திப்பிரிவு

மும்பை: 'பல ஜாம்பவான்கள் இதனைக் கடந்து வந்துள்ளனர்' என தொடர் தோல்வி குறித்து ட்வீட் செய்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா.

'வாழ்ந்து கெட்ட குடும்பம்' என ஒரு சொலவடை உண்டு. அதுபோன்றதொரு நிலையில்தான் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபிஎல் கிரிக்கெட் களத்தில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி மும்பை. இருந்தாலும் நடப்பு சீசனில் ஒரே ஒரு போட்டியில் கூட அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. வரிசையாக 8 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது மும்பை. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் ஃபார்ம் அவுட்டாகியுள்ளது மும்பை.

இந்நிலையில், தொடர் தோல்வி குறித்து உருக்கமான ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார் மும்பை அணியின் கேப்டன் ரோகித். "நாங்கள் இன்னும் இந்தத் தொடரில் எங்களது தடத்தை முன்னோக்கி எடுத்து வைக்காமல் உள்ளோம். ஆனால், இது எல்லோருக்கும் நடக்கும். பல்வேறு விளையாட்டு ஜாம்பவான்கள் இதனைக் கடந்து வந்திருப்பார்கள். நான் இந்த அணியையும், அதன் சூழலையும் நேசிக்கிறேன். அதே நேரத்தில் அணியின் மீது நம்பிக்கை வைத்த ஆதரவாளர்களை எண்ணி பெருமை கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார் ரோகித்.

இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட், பும்ரா என முன்னணி வீரர்கள் இருந்தும் வெற்றி பெற தவறியுள்ளது மும்பை அணி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்