பாஸ்டன் மாரத்தான் | 4 நொடிகள் வித்தியாசத்தில் மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்த பெரெஸ் ஜெப்சிர்சிர்

By செய்திப்பிரிவு

பாஸ்டன்: அமெரிக்க நாட்டில் காலம்காலமாக நடத்தப்பட்டு வரும் பாஸ்டன் மாரத்தான் ஓட்டத்தில் வெறும் நான்கு நொடிகள் வித்தியாசத்தில் மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார் கென்ய வீராங்கனை பெரெஸ் ஜெப்சிர்சிர்.

சுமார் 124 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் உலகின் பாரம்பரியமிக்க மாரத்தான் ஓட்டத் தொடர்களில் பாஸ்டன் மாரத்தானும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமைகளில் இந்த மாரத்தான் ஓட்டம் ஆரம்பமாகவும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான மாரத்தான் ஓட்டம் கடந்த 18 ஆம் தேதியன்று தொடங்கியது. கரோனா காரணமாக 2020-ல் இந்தப் போட்டி நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது.

இதில் உலகின் தலைசிறந்த மாரத்தான் ஓட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். மகளிர் பிரிவில் பந்தய தூரத்தை முழுவதுமாக ஓடி முடித்த டாப் 30 பேரில் முதல் 7 இடங்களை பிடித்தவர்களில் ஆறு பேர் கென்ய வீராங்கனைகள். இதில் முதலிடத்தை பிடித்தது 28 வயதான கென்ய வீராங்கனை பெரெஸ் ஜெப்சிர்சிர். பந்தய தூரத்தை 2:21:01 கடந்து முதலிடம் பிடித்தார். அவர் டோக்கியோ ஒலிம்பிக் மாரத்தான் ஓட்டத்திலும் தங்கம் வென்றவர்.

இரண்டாவது இடத்தை எத்தியோப்பிய வீராங்கனை அபேபெல் எஷானே (Ababel Yeshaneh) பிடித்திருந்தார். அவர் பந்தய தூரத்தை 2:21:05 கடந்தார்.

ஆடவர் பிரிவில் கென்ய வீரர் எவன்ஸ் செபெட் முதலிடம் பிடித்தார். வீல்சேர் ஆடவர் பிரிவில் அமெரிக்க பாரா ஒலிம்பிக் வீரர் டேனியல் மற்றும் மகளிர் பிரிவில் சுவிட்சர்லாந்து வீராங்கனை மானுவேலா முதலிடம் பிடித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்