டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டி | தங்கப் பதக்கம் வென்றார் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்

By செய்திப்பிரிவு

கோபன்ஹேகன்: இந்திய நீச்சல் வீரரும், நடிகர் மாதவனின் மகனுமான வேதாந்த் மாதவன், டேனிஷ் ஓபன் நீச்சல் தொடரில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்திய சினிமா நடிகர்களில் ஒருவரான நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன், சிறு வயது முதலே நீச்சல் விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி செய்து வருகிறார். 16 வயதான அவர் இந்திய நாட்டின் சார்பில் சர்வதேச அளவிலான நீச்சல் தொடர்களிலும் பங்கேற்று வருகிறார். தற்போது அவர் டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகன் நகரில் நடைபெறும் டேனிஷ் ஓபன் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

இதே தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 1500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் வேதாந்த். இந்தத் தொடரில் அவர் பங்கேற்ற மூன்று பந்தயங்களிலும் அபார திறனை வெளிப்படுத்தி தனது முந்தைய சிறந்த (பெஸ்ட்) டைமிங்கை முறியடித்துள்ளார் அவர்.

இந்நிலையில், 800 மீட்டர் ஆடவர் ப்ரீ ஸ்டைல் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் வேதாந்த். 08:17.28 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றுள்ளார் அவர். இதனை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்