IPL 2022 | திரிபாதி, மார்க்கரமின் ஆக்ரோஷ ஆட்டம் - 3வது வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

By செய்திப்பிரிவு

மும்பை: ஐபிஎல் தொடரின் இன்றைய 25-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றுள்ளது.

176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆட்டத்தின் இரண்டாம் ஓவரிலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. அந்த அணியின் ஓப்பனர் அபிஷேக் சர்மாவை 3 ரன்களில் கிளீன் போல்டக்கினார் கம்மின்ஸ். இதன்பின் வந்த ராகுல் திரிபாதி உடன் கேப்டன் கேன் வில்லியம்சன் இணைந்தார். என்றாலும் பவர் பிளே முடியும் வரைகூட அவர் தாக்குபிடிக்கவில்லை. 6வது ஓவரை வீசிய ரஸ்ஸல், கேன் வில்லியம்சனை 17 ரன்களில் வெளியேற்றினார்.

டு டவுனில் இறங்கிய எய்டன் மார்க்கரம் உடன் இணைந்து அணியை மீட்டெடுத்துடன் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் ராகுல் திரிபாதி. கேகேஆர் பந்துவீச்சை அடுத்தடுத்து சிக்ஸருக்கு பறக்கவிட்ட அவர், 21 பந்துகளில் அரைசதம் அடித்ததுடன் விரைவாக ரன்கள் சேர்த்தார். இதனால் அணியின் ரெக்கொயர் ரேட் வெகுவாக குறைந்தது. 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் சேர்த்திருந்த திரிபாதி, ரஸ்ஸல் ஓவரில் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் ஆகி வெளியேறினார்.

எனினும், மார்க்கரம் மற்றும் நிகோலஸ் பூரன் ஜோடி சன்ரைசர்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. 17வது ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை என்ற நிலையில் மார்க்கரம் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து வெற்றி இலக்கை எட்டவைத்தார். இதன்மூலம்
ஹைதராபாத் அணி இந்த தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. கொல்கத்தா தரப்பில் ரஸ்ஸல் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தா அணியின் இன்னிங்ஸை ஆரோன் பின்ச், வெங்கடேஷ் ஐயர் தொடங்கினர். முதல் ஓவரின் 2வது பந்திலேயே ஆரோன் பின்சை மார்கோ ஜான்சன் வெளியேற்றினார். 7 ரன்களில் நடையைக் கட்டினார் பின்ச். அடுத்ததாக வந்த வெங்கடேஷ் ஐயரை தமிழக வீரர் நடராஜன் போல்டாக்கி 6 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்து வந்த சுனில் நரேனை சிக்ஸர் விளாசிய கையோடு விக்கெட்டாக்கினார் நடராஜன். அவரைத்தொடர்ந்து 28 ரன்களை சேர்ந்திருந்த ஷ்ரேயாஸ் ஐயரும் நடையைக்கட்டினார்.

ஆரம்பத்திலிருந்தே தடுமாற்றத்துடன் காணப்பட்ட கொல்கத்தா அணி10 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்களை சேர்த்தது. அதற்குப் பின் களத்திற்கு வந்த ஷெல்டன் ஜாக்சன் 7 ரன்களிலும், நிதிஷ் ராணா 54 ரன்களிலும், பேட் கம்மின்ஸ் 3 ரன்களிலும் வெளியேறினர். ஹைதராபாத் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ரஸ்ஸல் 4 சிக்ஸர்களை விளாசி 49 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 1 ரன்னுடனும் பேட்ஸ்மேன்களாக களத்தில் உள்ளனர். இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 175 ரன்களை குவித்தது.

ஹைதராபாத் அணி தரப்பில் அதிகபட்சமாக நடராஜன் 3 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ் குமார், மார்கோ ஜான்சன், ஜகதீஷா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்