IPL 2022 | குஜராத்தின் அசத்தல் பவுலிங்கால் வீழ்ந்த டாப் ஆர்டர் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி

By செய்திப்பிரிவு

மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

மும்பையில் நடந்த ஐபிஎல் 15வது சீசன் 24வது போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் மற்றும் மேத்யூ வேட் ஓப்பனிங் ஜோடியும், ஒன் டவுன் இறங்கிய தமிழக வீரர் விஜய் சங்கர் குஜராத் அணியின் டாப் ஆர்டர் சொதப்பினாலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் இளம் வீரர் அபினவ் மனோகர் உதவியால் அந்த அணி இருபது ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்தது 194 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்டியா 87 ரன்களும், அபினவ் மனோகர் 43 ரன்களும் எடுத்திருந்தனர்.

இதையடுத்து 195 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஓப்பனிங் வீரர் தேவ்தத் படிக்கல் இரண்டாவது ஓவரின் கடைசி டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் மற்றொரு ஓப்பனிங் வீரர் ஜாஸ் பட்லர் அதிரடியாக இன்னிங்ஸை துவக்கினார். பவர் பிளே ஓவர்களை சரியாக பயன்படுத்திய அவர் 23 பந்துகளில் அரைசதம் கடந்தாலும், விரைவாகவே அவுட் ஆனார். 54 ரன்கள் சேர்த்தார் அவர்.

சர்ப்ரைஸாக இன்று ராஜஸ்தான் அணிக்கு அஸ்வின் ஒன் டவுன் இறங்கினார். பவுண்டரி அடித்து துவக்கம் கொடுத்தாலும் பெரிய தாக்கத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை. 8 ரன்களில் அவர் வெளியேற அடுத்த வந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் 11 ரன்கள் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதன்பின் வந்தவர்களில் ஹெட்மேயர், ஜிம்மி நீசம், ரியான் பராக் ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை தொட்டனர். சீரான இடைவெளியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பவுலிங் யூனிட் விக்கெட்களை வீழ்த்த 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் மட்டுமே இழந்தது.

இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது 4வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. அந்த அணி தரப்பில் அறிமுக வீரர் யஷ் தயாள் மற்றும் லுக்கி பெர்குசன் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்