மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. இதனை முன்னிட்டு ரசிகர் ஒருவர் காண்போரின் நெஞ்சை கொள்ளை போக செய்யும் ஓவியத்தை தீட்டி அசத்தியுள்ளார்.
இரு அணிகளும் புதிய கேப்டனின் தலைமையில் நடப்பு சீசனில் விளையாடி வருகின்றன. சென்னைக்கு ஜடேஜாவும், பெங்களூருவுக்கு டூப்ளசியும் கேப்டன்களாக உள்ளனர். சென்னை அணி இந்த சீசனின் முதல் நான்கு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இரு அணிகளும் ஐபிஎல் களத்தில் 28 முறை நேருக்கு நேராக பலப்பரீட்சை செய்துள்ளன. இதில் சென்னை அணி 18 முறையும், பெங்களூரு 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.
இரு அணியிலும் பரஸ்பரம் அன்பை பரிமாறிக் கொள்ளும் வீரர்கள் அதிகம் உள்ளனர். அது தொடர்பான புகைப்படங்கள் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டுள்ளது. தோனி மற்றும் கோலிக்கு இடையே உள்ள புரிதல். முன்னாள் சிஎஸ்கே வீரர் டூப்ளசி முதல் முறையாக சென்னை அணிக்கு எதிராக களம் இறங்கும் போட்டி. ஜடேஜா - டூப்ளசி மற்றும் உத்தப்பா சந்திப்பு என படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
அணி மாறினாலும், அணியும் ஜெர்ஸியின் நிறம் மாறினாலும் இவர்கள் கிரிக்கெட் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து நிற்கிறார்கள். இந்நிலையில், ரசிகர் ஒருவர் தோனி - கோலி - டூப்ளசி ஆகியோர் ஒன்றாக அணைத்தபடி நிற்கும் ஓவியத்தை வரைந்துள்ளார். இது சகோதரர்களின் கூடு என அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். அந்த ரசிகரின் பெயர் லிஜேஷ் எனத் தெரிகிறது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதள பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது.
» IPL 2022 | தீபக் சாஹர் அணிக்கு திரும்புவதில் சிக்கல்; சென்னைக்கு பின்னடைவு
» காமன்வெல்த், ஆசிய விளையாட்டுக்கான தகுதிப் போட்டிகளை தவிர்க்க சாய்னா முடிவு
அந்த ரசிகர் தொடர்ச்சியாக சென்னை அணிக்கு ஆதரவாக பல படங்களை வரைந்து வருவதை அவர் முன்பு பதிவு செய்த பதிவுகளில் பார்க்க முடிகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
54 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago