மும்பை: கால்பந்தாட்டம் போன்றுதான் டி20 கிரிக்கெட்டும் ஒரு குழு விளையாட்டு என தெரிவித்துள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 20-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ராஜஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் அஸ்வின், ரிட்டையர்ட் அவுட் முறையில் 19-வது ஓவரில் விளையாடிக் கொண்டிருந்தபோது பெவிலியன் திரும்பினார்.
இது கிரிக்கெட் உலகில் பேசுபொருளானது. இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ளார் அஸ்வின். ராஜஸ்தான் அணியின் வியூகம் இது என அந்த அணியின் பயிற்சியாளர், கேப்டன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
“உற்சாக மிகுதியில் கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு என்பதை மறந்து விடுகிறோம். நாம் கவனிக்கத் தவறிய விளையாட்டின் முக்கியமான அம்சம் இது. கிட்டத்தட்ட கால்பந்தாட்டத்தை போன்றது. அது அந்த தருணத்தில் எடுக்கப்பட்டது. இங்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் அல்லது விக்கெட் வீழ்த்துபவர்கள் தான் கோல் ஸ்கோரர்கள். அதற்கு அணியின் கோல் கீப்பர்கள் அல்லது டிஃபண்டர்கள் தயாராக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு மதிப்பு இருக்கும்” என தெரிவித்துள்ளார் அஸ்வின்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago