ஆஸி.யில் கலக்கிய நியூஸி. வீரர் - சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் ராஸ் டெய்லர்

By செய்திப்பிரிவு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பிரியா விடை பெற்றார் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ராஸ் டெய்லர். 38 வயதான அவர் கடந்த 2006 வாக்கில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் என்ட்ரி கொடுத்தவர். 16 ஆண்டு காலம் கிரிக்கெட் களத்தில் தன் நாட்டுக்காக ரன்களை சேர்த்து வந்தார்.

இந்நிலையில், தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றுள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 மூன்று கிரிக்கெட் ஃபார்மெட்டுகளிலும் நியூசிலாந்து அணிக்காக மொத்தம் 450 போட்டிகளில் விளையாடியுள்ளார். மூன்று ஃபார்மெட்டுகளையும் சேர்த்து 18,199 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

முதல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது தொடங்கி ஆஸ்திரேலிய மண்னில் அதிக ரன்களை சேர்த்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் என்பது வரையில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். 181* (நாட்-அவுட்) ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். நியூசிலாந்து அணியின் ஆடும் லெவனில் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேன்.

இந்தியாவுக்கு எதிரான 2019 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் 74 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்து அசத்தியவர். அதன் மூலம் அந்த அணி ஆட்டத்தை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நியூசிலாந்து நாட்டின் ஹாமில்டன் நகரில் நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பிரியா விடைபெற்றார் அவர். அப்போது தனது குடும்பத்தினருடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்