நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் மூன்று போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியபோது பனிப்பொழிவுதான் காரணம் என சொல்லப்பட்டது. ஆனால், மூன்றாவது போட்டியில் சென்னை அணி இரண்டாவதாக பேட் செய்து ஆட்டத்தை இழந்தது.
இந்நிலையில், அதற்கு என்ன காரணம் என ரசிகர்கள் பலரும் பல கோணங்களில் காரணம் சொல்லி வருகின்றனர். சென்னை அணி பெரும்பாலும் இது மாதிரியான தொடர் தோல்விகளை சந்தித்தது இல்லை. ஒரே ஒரு முறை மட்டும் சென்னை அணி முதல் சுற்றோடு தொடரை விட்டு வெளியேறி இருந்தது. அது கடந்த 2020 சீசனில் நடந்தது. அமீரகத்தில் நடைபெற்ற அந்த சீசனில் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பி இருந்தார் சுரேஷ் ரெய்னா. அந்த சீசன் முழுவதும் அவர் விளையாடவில்லை.
2022 மெகா ஏலத்தில் சென்னை உட்பட எந்த அணியும் ரெய்னாவை ஏலத்தில் எடுக்கப்படவில்லை. 'மிஸ்டர் ஐபிஎல்' என போற்றப்படுபவர் அவர். இப்படி 2020 மற்றும் 2022 என இரண்டு சீசனிலும் ரெய்னா இல்லாமல் களம் இறங்கிய சென்னை அணி களத்தில் வெற்றிக்காக கடுமையாக போராடியுள்ளது. ரெய்னா இல்லாத ராசிதான் சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் சென்டிமென்ட்டாக சொல்லி வருகின்றனர். இதனை ரசிகர்கள் அவர் இல்லாத அந்த இரண்டு சீசனையும் ஒப்பிட்டு சொல்லி வருகின்றனர்.
ஆடும் லெவனில் ரெய்னா இல்லாமல் மொத்தம் 22 போட்டிகளில் சென்னை விளையாடியுள்ளது. அதில் 14 போட்டிகளில் சென்னை தோல்வியை தழுவியுள்ளது. மொத்தம் 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா 5,528 ரன்கள் சேர்த்துள்ளார். 39 அரைசதங்கள் இதில் அடங்கும். வரும் சனிக்கிழமை அன்று சென்னை அணி ஹைதராபாத் உடன் பலப்பரீட்சை செய்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago