மகளிர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா!

By செய்திப்பிரிவு

இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணியினர் நடப்பு FIH ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, இன்று நடைபெற்ற ஜெர்மனி அணியுடனான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணிக்காக இந்த ஆட்டத்தில் லால்ரெம்சியாமி மற்றும் மும்தாஜ் ஆகிய வீராங்கனைகள் இந்திய அணிக்காக கோல்களை பதிவு செய்தனர். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே இந்தியா முன்னிலை செலுத்தி வந்தது. இந்த வெற்றியின் மூலம் 'டி' பிரிவில் முதல் அணியாக இந்தியா தகுதி பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தடுப்பாட்டம் சிறப்பாக அமைந்திருந்தது. ஜெர்மனி அணி வீராங்கனைகள் அயராது கோல் பதிவு செய்ய முயற்சிகளை மேற்கொண்டனர். இருந்தாலும் இந்திய டிஃபென்ஸ் வீராங்கனைகள் சிறப்பாக அதனை தடுத்திருந்தனர். இந்திய கோல் கீப்பர் பிச்சு தேவி அமர்க்களமாக விளையாடி இருந்தார். 15 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன. வரும் செவ்வாய்க்கிழமை அன்று இந்திய அணி மலேசியாவுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE