நடப்பு ஐபிஎல் சீசனில் லீடிங் விக்கெட் டேக்கராக அசத்தி வருகிறார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ். அதன் மூலம் இப்போதைக்கு Purple Cap ஹோல்டராகவும் அவர் உள்ளார்.
கடந்த 2010 சீசன் முதலே ஐபிஎல் களத்தில் விளையாடி வருகிறார் உமேஷ். டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், டெல்லி (2021) என இதற்கு முந்தைய சீசன்களில் அவர் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார். இந்த சீசனுக்கு முன்னர் வரையில் அவர் 121 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 119 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். கடந்த சீசனில் டெல்லி அணிக்காக அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. முழுவதும் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் விளையாடும் முன்னணி பவுலர்களில் ஒருவர் உமேஷ். இருந்தாலும் அவருக்கு அந்த ட்ரீட்மென்ட்.
அத்தகைய சூழலில் தான் பிப்ரவரி மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தில் கொல்கத்தா அணி அவரை அடிப்படை விலைக்கே வாங்கியிருந்தது. 34 வயதான அவர் துளியளவும் மனம் தளரவில்லை. நம்பிக்கையை இழக்கவில்லை. தனது ஒட்டுமொத்த விளையாட்டு திறனையும் ஒன்று திரட்டி களத்தில் அதனை வெளிப்படுத்தினார். அதன் பலனாக இந்த சீசனில் இதுவரையில் அவரது அணி விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் ஆடும் லெவனில் விளையாடிய அவர் 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
சென்னைக்கு எதிராக 2 விக்கெட், பெங்களூர் அணிக்கு எதிராக 2 விக்கெட் மற்றும் பஞ்சாப் அணிக்கு எதிராக 4 விக்கெட் வீழ்த்தி உள்ளார். அவரது பவுலிங் எக்கானமி 4.91. பவர் பிளேயில் எதிரணி பேட்ஸ்மேன்களை அப்செட் செய்கிறார். இதன் மூலம் பலம் வாய்ந்த கொல்கத்தா அணியின் பவுலிங் யூனிட்டுக்கு மேலும் பலம் சேர்க்கிறார்.
» IPL 2022 | விரைவில் 50% பார்வையாளர்களை அனுமதிக்க பிசிசிஐ திட்டம்
» IPL 2022 | கேட்ச்களை கோட்டைவிட்டதால் வந்த வினை - லக்னோ அணியிடம் போராடி வீழ்ந்த சென்னை
உமேஷ் தான் விளையாடிய மூன்று ஆட்டங்களில் இரண்டு முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago