IPL 2022 | பிரசித், சஹால் ஸ்ட்ரைக்ஸ் - 61 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் முதல் வெற்றி

By செய்திப்பிரிவு

புனே: ஐபிஎல் தொடரின் 15வது சீசனின் லீக்கின் 5வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 210 ரன்களை துரத்திய சன்ரைசர்ஸ் அணி டாப் ஆர்டர் முழுவதும் ராஜஸ்தான் வேகத்தில் வீழ்ந்தது. கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் துவக்கம் கொடுத்தனர். இதில் கேன் வில்லியம்சன் இரண்டு ரன்களில் அவுட் ஆக, அபிஷேக் ஷர்மா 9 ரன்களில் அவுட் ஆனார். இதற்கடுத்து வந்த ராகுல் திரிபாதி மற்றும் நிகோலஸ் பூரன் இருவரும் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி நடையைக் கட்டினர். இப்படி முதல் வரிசை வீரர்கள் நால்வரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனதால் சன்ரைசர்ஸ் அணி எட்டு ஓவர்களுக்கு உள்ளாகவே தனது மொமண்ட்டத்தை இழந்தது. பிரசித் கிருஷ்ணா, ட்ரெண்ட் பவுல்ட் மற்றும் யுஸ்வேந்திர சஹால் மூவரும் இணைந்து ராஜஸ்தான் அணியை சுட்ருட்டினர்.

இதன்பின் வந்தவர்களில் மார்க்ரமை தவிர மற்றவர்களில் சிலர் சொதப்பினர். மார்க்ரமுக்கு சிறிதுநேரம் ரொமாரியோ ஷெப்பர்ட் உறுதுணையாக இருந்தார். அவரும் 24 ரன்களில் பெவிலியன் திரும்ப, கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் அதிரடி காட்டினார். 13 பந்துகளில் 40 ரன்களை எடுத்த அவரும் பவுல்ட் பந்தில் கேட்ச் ஆனார்.

அணியின் ரெக்கோயர் ரேட் ஒருகட்டத்தில் 40ஐ தாண்டி இருந்ததால் இருவரின் அதிரடியும் வீணானது. இருவரின் உதவியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எய்டன் மார்க்ரம் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்திருந்தார். இதன்மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி இந்த ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் சஹால் மூன்று விக்கெட்களையும், பிரசித் கிருஷ்ணா, பவுல்ட் தலா இரண்டு விக்கெட்களையும் எடுத்திருந்தனர்.

ராஜஸ்தான் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, லெஃப்ட் - ரைட் காம்பினேஷனில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் சீனியர் வீரர் ஜாஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவருமே அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். குறிப்பாக பவர் பிளே ஓவர்களை நன்றாக பயன்படுத்தி கொண்டனர். இதனால் ஐந்து ஓவர்களிலேயே 50 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

பவர் பிளே முடிந்த பின்பே இவர்கள் கூட்டணியை பிரிக்க முடிந்தது. 20 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால் ஆல் ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்ட் ஓவரில் கேட்ச் கொடுத்து முதல் விக்கெட்டாக வெளியேறினார். சில ஓவர்களிலேயே சஞ்சு சாம்சன் உடன் ஜாஸ் பட்லர் கூட்டணி அமைக்க விடாமல் பார்த்துகொண்டார் உம்ரான் மாலிக். இதனால், பட்லர் 38 ரன்கள் எடுத்த நிலையில் உம்ரான் மாலிக் வேகத்தில் வீழ்ந்தார். எனினும், கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் அணி சரிவை சந்திக்காமல் பார்த்துக்கொண்டனர்.

இருவரும் ஆக்ரோஷமாக சன்ரைசர்ஸ் பந்துவீச்சை எல்லைக்கோட்டுக்கு சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக பறக்கவிட்டனர். குறிப்பாக, ஸ்பின் ஓவர்களை குறிவைத்து அட்டாக் செய்தனர். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மீண்டும் உம்ரான் மாலிக் இந்தக் கூட்டணியை பிரித்தார். 41 ரன்கள் எடுத்திருந்த தேவ்தத் படிக்கலை கிளீன் போல்டக்கி வெளியேற்றினார் உம்ரான். அதேநேரம், சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்த சில நிமிடங்களில், 55 ரன்களுக்கு அவரும் வெளியேற, அதன்பின் வந்த சிம்ரோன் ஹெட்மேயர் மற்றும் ரியான் பராக் அதே அதிரடியை தொடர் 19 ஓவரிலேயே 200 ரன்களை கடந்தது. இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ். சன்ரைசர்ஸ் தரப்பில் உம்ரான் மாலிக் மற்றும் நடராஜன் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்