ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கே - கொல்கத்தா இன்று மோதல்

By செய்திப்பிரிவு

மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் ஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின்15-வது சீசன் போட்டிகள் இன்றுதொடங்குகின்றன. இந்த சீசனில்லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாக களமிறங்குகின்றன. கரோனா தொற்றை கருத்தில் கொண்டு இம்முறை லீக் போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிராவில் உள்ள 4 மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. போட்டிகளை நேரில் காண 25 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

10 அணிகள் கலந்து கொள்வதால் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், பிளே ஆஃப் சுற்றில் 4 ஆட்டங்கள் என மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு அணியும் வழக்கம் போன்று 14 லீக் ஆட்டங்களில் மோதும். இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக் கோப்பை நடைபெறஉள்ளதால் ஐபிஎல் தொடர் இந்திய வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

ஐபிஎல் 15-வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. தோனி கேப்டன்பதவியில் இருந்து விலகியுள்ளதால் ரவீந்திர ஜடேஜா தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளமிறங்க உள்ளது. 40 வயதாகும் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கக்கூடும் என்பதால் மட்டை வீச்சில் அவர், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா அணி புதிய கேப்டனான ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் இந்த சீசனை எதிர்கொள்கிறது. கடந்த சீசனின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணி, கொல்கத்தாவை வீழ்த்தி 4-வது முறையாக பட்டம்வென்றிருந்தது. இதற்கு கொல்கத்தா அணி பதிலடி கொடுத்து தொடரை சிறப்பாக தொடங்க முனைப்பு காட்டக்கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

29 mins ago

விளையாட்டு

34 mins ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்