மதுரை: பிரேசிலில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மாநகராட்சி பள்ளி மாணவிக்கு மேயர் வ.இந்திராணி வாழ்த்து தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் வில்லாபுரத்தைச்சேர்ந்த ஜெ.ஜெர்லின் அனிகா என்ற மாணவி பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் மாற்றுத் திற னாளி ஆவார்.
இவர் சீனா தைபேயில் 2019-ம் ஆண்டு சிறப்புப் பிரிவினருக்கான 2-வது உலக இறகுப் பந்தாட்டம் (பாட்மிண்டன்) சாம்பியன்ஷிப் தொடர் போட்டியில் தங்கப் பதக்கமும், மலேசியாவில் 2018-ல் நடந்த ஆசியா பசிபிக் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்க மும் வென்றுள்ளார்.
தற்போது பிரேசிலில் மே 1-ம் தேதி தொடங்க உள்ள 24-வது பாரா ஒலிம்பிக் இறகுப் பந்துப் போட்டி ஒற்றையர் மற்றும் குழு பிரிவில் பங்குபெற உள்ளார்.
இவருக்கு மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் கார்த் திகேயன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது மாநகராட்சி கல்வி அலுவலர் ஆதிராம சுப்பு, உதவி கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago