2013ல் ஐபிஎல் தொடரில் நுழைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2016-ல் கோப்பையை வெல்ல முக்கியப் பங்கு வகித்தவர்கள் உலக கிரிக்கெட்டில் அபாயகரமான வீரர்களான டேவிட் வார்னர், ரஷீத் கான் இருவரும்தான். ஆனால் இந்த இருவருமே இப்போது அந்த அணியில் இல்லை. வார்னர் டெல்லி அணியிலும், ரஷீத் புதிதாக பங்கேற்கும் குஜராத் அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
சன்ரைசர்ஸை பொறுத்தவரை கடந்த சீசன் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருபுறம் என்றால், வார்னர் கேப்டன் பதவியில் இருந்தும், பிளேயிங் லெவனில் இருந்தும் நீக்கப்பட்டது சர்ச்சையானது. சன்ரைசர்ஸ் அணிக்காக மட்டும், 4000 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் வார்னர். கடந்த சீசன்களாக அவரும், ரஷீத் காணும் காண்பித்த கன்சிஸ்டென்ஸி காரணமாக மட்டுமே அந்த அணி கௌரவமான நிலையில் இருந்தது. இப்போது இந்த இருவருமே இல்லாதது ஆரஞ்சு ஆர்மியை ஆட்டிப்படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏலத்தில் சன்ரைசர்ஸ் செயல்பாடு எப்படி?
மெகா ஏலத்தில் மிகத் தெளிவாக வீரர்களை வாங்கியது என்றால், அது சன்ரைசர்ஸ்தான். வில்லியம்சன் (ரூ.14 கோடி), அப்துல் சமத் (ரூ.4 கோடி) மற்றும் உம்ரான் மாலிக் (ரூ.4 கோடி) ஆகியோரை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு ஏலத்தில் பங்கேற்றது. ஹைதராபாத் சில சுவாரஸ்யமான கலவையுடன் வீரர்களை கொண்டுள்ளது.
» மகளிர் உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்த இந்தியா
» IPL 2022 அணி அலசல் | ஷேன் வார்ன் செய்த மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துமா ராஜஸ்தான் ராயல்ஸ்?
நிக்கோலஸ் பூரன். மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த இவர் கடந்த ஐபிஎல் சீசனில் கொண்டிருந்த சராசரி 7.72. மொத்தம் எடுத்த ரன்கள் 82. மோசமான ஃபார்மில் இருந்த இவரை ரூ.10.75 கோடிக்கு சன்ரைசர்ஸ் வாங்கியது. இத்தனை கோடி கொடுத்தற்கு சர்வதேச தொடர்களில் பூரன் வெளிப்படுத்திய சமீபத்திய பெர்பாமென்ஸ். இதே மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த மற்றொரு வீரருக்கும் கோடிகளை கொட்டியது. கரீபியன் லீக்கில் ஆல் ரவுண்டராக ஜொலித்த ரோமாரியோ ஷெப்பர்ட்தான் அந்த வீரர். ரூ.7.75 கோடிக்கு அவரை ஒப்பந்தம் செய்த அந்த அணி, புவனேஷ்வர் குமார், டி நடராஜன் போன்ற வீரர்களையும் மீண்டும் வாங்கியது. இளம்வீரர்கள் ராகுல் திரிபாதி (8.5 கோடி), வாஷிங்டன் சுந்தர் (8.75 கோடி), அபிஷேக் ஷர்மா (6.5 கோடி) ஆகியோரையும் வளைத்தது.
வேகப்பந்து வீச்சு பலம்: அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளராக சன்ரைசர்ஸ் 118 விக்கெட்களை வீழ்த்தியுள்ள ஸ்விங் + பாஸ்ட் புகழ் புவனேஷ்வர் குமார் வழக்கம் போல இந்த ஆண்டும் பௌலிங் யூனிட்டுக்கு தலைமை தாங்க உள்ளார். அவருடன் முழங்கால் காயத்தில் இருந்து திரும்பியுள்ள தமிழக மைந்தன் நடராஜன், மணிக்கு 150 கிமீ வேகம் வீசும் உம்ரான் மாலிக், கார்த்திக் தியாகி என இந்தியாவைச் சேர்ந்த நான்கு தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுடன், மார்கோ ஜான்சன், சீன் அபோட் மற்றும் ஷெப்பர்ட் ஆகிய வெளிநாட்டு வீரர்களும் வேகப்பந்து வீச்சில் அசுரப் பலத்துடன் உள்ளனர்.
பலவீனமான சுழல்: சன்ரைசர்ஸ் இழந்துள்ளது ரஷீத் மட்டுமல்ல, அவரின் சக நாட்டவர்களான முகமது நபி மற்றும் முஜீப் உர் ரஹ்மானையும் தான் இழந்துள்ளது. ஆப்கன் சுழலுக்குப் பதிலாக இந்திய சுழலை இந்தமுறை நம்ப உள்ளது. ஷ்ரேயாஸ் கோபால் மற்றும் ஜெகதீஷா சுசித் ஆகியோருடன் சன்ரைசர்ஸின் புதிய நம்பிக்கையை உருவெடுத்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். ரஷீத்தை கம்பேர் செய்யும்போது வாஷிங்டன் சுந்தரின் சராசரி முதல் எக்கனாமி வரை எல்லாம் குறைவே. எனினும், அவரின் ஆல் ரவுண்டர் ஆப்ஷன் அதை ஈடுகட்டும் என்று நம்புகிறது சன்ரைசர்ஸ் நிர்வாகம்.
இளம்வீரர்கள் நம்பிக்கை: ஹைதராபாத் முகாமை பொறுத்தவரை இளம்வீரர்களுக்கு தான் வரவிருக்கும் சீசனில் தங்கள் திறமையை வெளிப்படுத்த சரியான வாய்ப்பாக அமையவுள்ளது. உம்ரான் மாலிக், சமத், நடராஜன் போன்றோர் கடந்த சீசன்களில் அவர்களின் திறமையை நிரூபித்துள்ள நிலையில், பேட்டிங்கில் அபிஷேக் சர்மா-ப்ரியம் கர்க் ஜோடி மீதான எதிர்பார்ப்பு, ஸ்டார் பேட்டர் எய்டன் மார்க்ரம், கிளென்பிலிப்ஸ், ராகுல் திரிபாதி மற்றும் கார்த்திக் தியாகியும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அச்சுறுத்தும் பேட்டிங் லைன் அப்: கேப்டன் கேன் வில்லியம்சன், எய்டன் மாக்ரம், ராகுல் திரிபாதி என பேட்டிங் லைன் அப்பில் வலுவான டாப் ஆர்டரை கொண்டுள்ள சன்ரைஸர்ஸ்க்கு ஆறுதல் கொடுப்பது ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிக்கோலஸ் பூரனின் அசத்தல் பார்ம். இந்தியாவுக்கு எதிரான தொடரில் மூன்று அரை சதங்களை அடித்தார். இதேபோல் கடந்த சீசனில் 400 ரன்கள் எடுத்த திரிபாதி, எய்டன் மாக்ரம், கேன் வில்லியம்சன் என நிதானமான பிளேயர்களும் சன்ரைஸர்ஸ் பேட்டிங் லைன் அப் வலுவாக்குகிறது.
இந்த திறமைகளுடன் டேல் ஸ்டெயின், டாம் மூடி, விவிஎஸ் லக்ஸ்மன், பிரையன் லாரா, முத்தையா முரளிதரன் என மிஸ்டர் கூல் பயிற்சியாளர்கள், மற்றும் மிஸ்டர் கூல் கேப்டன் கேன் வில்லியம்சன் இணை இரண்டாம் முறை ஐபிஎல் கோப்பையை தட்டிதூக்குமா என்பது பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விவரம்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), அப்துல் சமத், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், நிக்கோலஸ் பூரன், நடராஜன், புவனேஷ்வர் குமார், பிரியம் கார்க், ராகுல் திரிபாதி, அபிஷேக் சர்மா, கார்த்திக் தியாகி, ஷ்ரேயாஸ் கோபால், ஜெகதீஷா சுசித், மார்க்ராம், மார்கோ ஜான்சன், ரொமாரியோ ஷெப்பர்ட், சீன் அபோட், ஆர் சமர்த், சவுரப் துபே, ஷஷாங்க் சிங், விஷ்ணு வினோத், க்ளென் பிலிப்ஸ், ஃபசல்ஹாக் ஃபரூக்கி
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago