'வாழ்க்கையில் தோல்விகளே இல்லை' - பேட்மிண்டன் வீரர் லக்சயா சென்னுக்கு குவியும் வாழ்த்துகள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை தழுவிய இந்திய வீரர் லக்சயா சென்னுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர்கள் சாதிக்க தவறிய நிலையில், இளம் வீரர் லக்சயா சென் இறுதிப்போட்டி வரை சென்றார். தரவரிசையில் 11-ம் இடத்தில் உள்ள லக்சயா சென் அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனும், உலகின் 7-ம் நிலை வீரருமான லீ ஜியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தார்.

இறுதிப் போட்டியில் உலகின் நம்பர்-1 மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்செல்சனை எதிர்கொண்டார் லக்சயா சென். விக்டர் ஆக்சல்சனின் நிதான ஆட்டத்தின் முன் லக்சயா சென்னால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 10-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் ஆட்டத்தை இழந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

20 வயதே ஆகும் லக்சயா சென், பிரகாஷ் நாத், பிரகாஷ் படுகோனே, கோபிசந்த், சாய்னாவை தொடர்ந்து இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய ஐந்தாவது இந்தியர். இதனால், அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்தில், "வாழ்க்கையில் தோல்விகளே இல்லை. ஒவ்வொரு முயற்சியிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் அல்லது கற்றுக் கொள்வீர்கள். இந்த அற்புதமான அனுபவத்திலிருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொண்டீர்கள் என்று நான் நம்புகிறேன் லக்சயா சென். இனிவரும் போட்டிகள் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல் பிரதமர் மோடி, "உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் லக்சயா சென். களத்தில் வெற்றிக்காக உங்கள் உறுதியை வெளிப்படுத்தினீர்கள். உங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள். இனி வரும் காலங்களில் வெற்றியின் புதிய உயரங்களை நீங்கள் தொடர்ந்து பெறுவீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று வாழ்த்தியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "ஒரு பில்லியன் இதயங்களை வென்றுள்ளீர்கள் லக்சயா சென். அருமையான விளையாட்டை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள். உங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்" என்றும் வாழ்த்தியுள்ளார்.

இதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்கள் பலரும் லக்சயா சென்னுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்