ஆல் இங்கிலாந்து ஓபன் 2-ம் சுற்றுக்கு சிந்து, சாய்னா முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

பர்மிங்ஹாம்: ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியின் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுக்கு, இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் முன்னேறினர்.

பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சிந்து, சீனாவின் ஜி யி வாங்கை எதிர்த்து போட்டியிட்டார். இதில், 21-18, 21-13 என்ற நேர் செட்களில் சீன வீராங்கனையை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு சிந்து முன்னேறினார்.

மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், இந்திய வீராங்கனை சாய்னா, ஸ்பெயினின் பீட்ரிஸ் கொராலஸை எதிர்த்து போட்டியிட்டு 21-17, 21-19 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினார்.

அதேவேளையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் போட்டியிட்ட இந்திய வீரர் சாய் பிரனீத், ஒலிம்பிக் சாம்பியனான டென்மார்க் வீரர் விக்டர் ஆக்செல்சனிடம் 20-22, 11-21 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்து, இந்தத் தொடரில் இருந்து வெளியேறினார். மேலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில், தாய்லாந்து வீரர் குன்லாவட் விடிட்சர்னிடம் இந்திய வீரர் பிரனாயும், நெதர்லாந்து வீரர் மார்க் கார்ல்ஜோவிடம் இந்திய வீரர் சமீர் வர்மாவும் தோல்வி அடைந்தனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், ஸ்காட்லாந்தின் அலெக்ஸாண்டர் டன் - ஆடம் அல் இணையை 21-17, 21-19 என்ற நேர் செட்களில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை வென்றது.

பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில், இந்தியாவின் ட்ரீசா ஜாலி - புல்லேலா காயத்ரி கோபிசந்த் இணை 17-21, 22-20, 21-14 என்ற செட்களில்
தாய்லாந்தின் பெனயபா ஐம்சார்த் - நுன்டக்ரன் ஐம்சார்த் இணையை போராடி வீழ்த்தி, அடுத்துச் சுற்றுக்கு முன்னேறியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்