வலுவாக இந்தியா: இலங்கை அணிக்கு 447 ரன்கள் இலக்கு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: பெங்களூரு பகலிரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 447 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 252 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் 35.5 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்கள் வீழ்த்தினார். அஸ்வின், ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 68.5 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 303 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரிஷப் பந்த் 31 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 50ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 87 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 67 ரன்களும் விளாசினர். மயங்க் அகர்வால்22, ரோஹித் சர்மா 46, ஹனுமா விகாரி 35, விராட் கோலி 13, ஜடேஜா 22, அஸ்வின் 13, அக்சர்படேல் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இலங்கை தரப்பில் ஜெயவிக்ரமா 4, எபுல்டேனியா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து 447 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 2வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்தது.

2வது நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் 28 பந்தில் அரை சதம் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்திருந்த இந்திய வீரர்களில் கபில்தேவின் சாதனையை (30 பந்துகள்) முறியடித்தார் ரிஷப் பந்த்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்