ஹாமில்டன்: நியூசிலாந்து நாட்டில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய வீராங்கனைகள் மிதாலி ராஜ் மற்றும் ஜூலன் கோஸ்வாமி இருவரும் புதிய உலக சாதனைகளை படைத்துள்ளனர்.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 155 ரன்கள் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் தற்போது புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இதேப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்தப் போட்டிக்கு தலைமை தாங்கியதன் மூலமாக உலகக் கோப்பை தொடர்களில் அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் மிதாலி. முன்னதாக, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பெலின்டா கிளார்க் 23 உலகக் கோப்பை போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டதே சாதனையாக இருந்தது.
மிதாலி இன்றைய ஆட்டத்தின் மூலம் 24 உலகக் கோப்பை போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு பெலின்டா கிளார்க் சாதனையை முறியடித்துள்ளார். ஏற்கெனவே, ஆறு உலகக் கோப்பை தொடர்களில் விளையாடிய முதல் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற சிறப்பையும் மிதாலி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 63.63 என்ற வெற்றி சதவீதத்துடன், இதுவரை பெண்கள் உலகக் கோப்பையில் 24 போட்டிகளில் விளையாடி அதில் 15 வெற்றிகளை கேப்டனாக பெற்றுக்கொடுத்துள்ளார். அதேநேரம் பெலின்டா கிளார்க் உலகக் கோப்பையில் 23 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி அதில், 21-ல் வெற்றியை ஈட்டிக்கொடுத்துள்ளார்.
மகளிர் உலகக்கோப்பை தொடர்களில் அதிக போட்டிகளில் விளையாடிய டாப்-5 கேப்டன்கள்
மிதாலி ராஜ் (இந்தியா): 24*
பெலிண்டா கிளார்க் (ஆஸ்திரேலியா) - 23
சூசன் கோட்மேன் (இங்கிலாந்து) - 19
டிரிஷ் மெக்கெல்வி (நியூசிலாந்து) - 15
மேரி-பாட் மூர் (அயர்லாந்து) - 15
இவர்களில் மிதாலி மட்டுமே இன்னும் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். மற்றவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலன் கோஸ்வாமி சாதனை: மிதாலியை போல இந்திய அணியின் மற்றொரு சீனியர் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இன்று நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் அனிஷா முகம்மது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை கோஸ்வாமி படைத்தார். 39 வயதாகும் அவர், இதுவரை ஐந்து உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார்.
ஐந்து உலகக் கோப்பை தொடர்களிலும் சேர்த்து மொத்தம் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை லின் புல்ஸ்டன் 39 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதுவரை சாதனையாக இருந்தது. அவர் 34 ஆண்டுகள் முன்பே அந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். அதற்கடுத்து யாரும் அதை நெருங்க முடியாமல் இருந்த நிலையில் 34 ஆண்டுகள் கழித்து அதனை ஜூலன் கோஸ்வாமி முறியடித்துள்ளார்.
மிதாலி மற்றும் ஜூலன் கோஸ்வாமி இருவரும் ஒரே போட்டியில் நிகழ்த்திய அடுத்தடுத்து சாதனைகள் நிகழ்த்தியதால், இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago