உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் -  4 தங்கத்துடன் இந்தியா முதலிடம்

By செய்திப்பிரிவு

கெய்ரோ: உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் 4 தங்க பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்தது.

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டித் தொடர் நடந்து வந்தது. மொத்தம் 60 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இந்த உலகக்கோப்பை போட்டித் தொடரில் பங்கேற்றனர். இந்தியா இதில் நான்கு தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ரிதம் சங்வான்- அனிஷ் பன்வாலா இணை 25 மீ ரேபிட் பயர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர். இதேபோல் ஆண்கள் 25 மீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா, குர்பிரீத் சிங், பாவேஷ் ஷெகாவத் ஆகியோர் அடங்கிய அணி இறுதிப்போட்டி வரை வந்து, ஜெர்மன் அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

ஒட்டுமொத்தமாக இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நான்கு தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கம் வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

இந்தியாவுக்கு அடுத்ததாக, நார்வே 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என இரண்டாமிடத்தையும், பிரான்ஸ் 3 தங்கப் பதக்கத்துடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்திய வீரர்களின் இந்த சாதனையை துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனம் வெகுவாக பாராட்டியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்