ஐபிஎல் 15வது சீசன் அட்டவணை வெளியீடு - முதல் போட்டியே சென்னை vs கொல்கத்தா: முழு விவரம்

By செய்திப்பிரிவு

மும்பை: ஐபிஎல் 2022, 15வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே மாதம் 29ம் தேதி முடிவடையும் என்று பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 26ம் தேதி தொடங்கும் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் முழுவதுமாக மகாராஷ்ட்ரா மாநிலத்திலேயே நடத்தப்படவுள்ளன. மும்பை, நவி மும்பை, புனே பகுதிகளில் உள்ள நான்கு மைதானங்கள் இதற்காக தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

வான்கடே மைதானத்தில் 20, பிரபோர்ன் ஸ்டேடியத்தில் 15, DY பாட்டீல் ஸ்டேடியத்தில் 20, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான கஹுஞ்சே மைதானத்தில் 15 என மும்பை மற்றும் நவி மும்பையில் மொத்தம் 55 போட்டிகளும் மற்றும் புனேவில் 15 போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. இவை அனைத்தும் லீக் போட்டிகள் மட்டுமே. பிளே-ஆப் சுற்று போட்டிகள் நடக்கும் மைதானங்கள் தொடர்பாக எந்த தகவலையும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிடவில்லை.

இதனிடையே, மார்ச் 26ம் தேதி தொடங்கி மே மாதம் 29ம் தேதி முடிவடையும் நடப்பாண்டு ஐபிஎல் லீக் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 26 தேதி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. மறுநாள், டெல்லி அணியை மும்பை அணி பிரபோர்ன் ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள உள்ளது. லீக் போட்டிகளில் இறுதி ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே மே 22 அன்று வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

மேலும், ஒருநாளில் இரண்டு போட்டிகள் இருந்தால் முதல் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கும், இரண்டாவதுபோட்டி இரவு 7:30 மணிக்கும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஒரேபோட்டி இருக்கும் பட்சத்தில் அது இரவு 7:30 மணிக்கும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தமுறை ஏற்கனவே உள்ள எட்டு அணிகளுடன் மேலும் இரண்டு அணிகள் என மொத்தம் 10 அணிகள் மோதவுள்ளன. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் என இரண்டு அணிகள் புதிதாக இணைந்துள்ளன.

குஜராத் அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலும், லக்னோ அணி கேஎல் ராகுல் தலைமையிலும் களமிறங்கவுள்ளன. மார்ச் 28ம் தேதி நடக்கும் போட்டியில் இந்த இரு அணிகளும் முதல்முறையாக எதிர்கொள்ளவுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்