மகளிர் உலகக் கோப்பையில் மே.இ.தீவுகள் த்ரில் வெற்றி

By செய்திப்பிரிவு

மவுண்ட் மவுங்கனி: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூஸிலாந்து அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

நியூஸிலாந்தின் மவுண்ட் மவுங்கனியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 259 ரன்கள் குவித்தது. ஹெய்லி மேத்யூஸ் 128 பந்துகளில், ஒரு சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் விளாசினார். 260 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 49 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவையாக இருந்தது. இதனால் அந்த அணி எளிதாக வெற்றி பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டாட்டின் வீசிய இந்த ஓவரில் எஞ்சிய 3 விக்கெட்களையும் பறிகொடுத்து நியூஸிலாந்து அணி தோல்வியடைந்தது.

டாட்டின் பந்து வீச்சில் கேட்டி மார்ட்டின் 44, ஜெஸ் கெர் 25, ஃபிரான் ஜோனாஸ் 0 ரன்களில் நடையை கட்ட நியூஸிலாந்து 49.5 ஓவர்களில் 256 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

விளையாட்டு

24 mins ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்