ஐபிஎல் Vs பிஎஸ்எல் விவாதமான பிரஸ்மீட் - ஆஸ்திரேலிய வீரரின் 'நச்' பதில்

By செய்திப்பிரிவு

ராவில்பிண்டி: "கிரிக்கெட் உலகின் சிறந்த தொடர்களில் ஒன்று ஐபிஎல். லீக் தொடர்களில் வலுவான தொடராகவும் ஐபிஎல் உள்ளது" என்று ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இங்கு மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டியில் விளையாடவுள்ளது. இந்தத் தொடர் வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. ஏனெனில் 1998-ம் ஆண்டுக்கு பாகிஸ்தானில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாடுவது இதுவே முதல்முறை என்பதால் அதிக கவனம் ஈர்த்துள்ளது. இரு அணிகள் இடையே முதல் டெஸ்ட் ராவில்பிண்டியில் நாளை மறுநாள் தொடங்கவிருக்கிறது. முன்னதாக, இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது, பாகிஸ்தானில் பிறந்து ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வரும் உஸ்மான் கவாஜாவிடம் பத்திரிகையாளர்கள் ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் லீக் தொடரான பிஎஸ்எல் குறித்து கேள்விகளை முன்வைத்தனர்.

இதற்கு பதில் கொடுத்த கவாஜா, "ஒரு லீக் தொடராக பிஎஸ்எல் கிரிக்கெட் உலகில் முன்னேறி வருகிறது. பாகிஸ்தான் வலிமைமிக்க வேகப் பந்துவீச்சு இந்தத் தொடரை பலமாக்கியுள்ளது. அதேநேரம், கிரிக்கெட் உலகின் சிறந்த தொடர்களில் ஒன்று ஐபிஎல். லீக் தொடர்களில் வலுவான தொடராகவும் ஐபிஎல் உள்ளது. உண்மையில், பிஎஸ்எல் மற்றும் ஐபிஎல் இடையே போட்டி கிடையாது. ஏனென்றால், ஐபிஎல் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை விட மிகப் பெரியது. ஐபிஎல் தொடர்களில் விளையாட உலகின் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்க விரும்புகிறார்கள்.

மேலும், இந்திய வீரர்கள் விளையாடும் ஒரே லீக் தொடர் ஐபிஎல் மட்டுமே. எனவே ஐபிஎல்லே உலகின் தலைசிறந்த கிரிக்கெட் லீக் தொடர்" என்று ஐபிஎல் குறித்து புகழ்ந்து பேசினார். அவரின் பதிலால் சற்றுநேரம், நேற்றைய பிரஸ்மீட் ஐபிஎல் vs பிஎஸ்எல் இடையிலான விவாதமாக மாறியது.

உஸ்மான் கவாஜா, ஐபிஎல், பிஎஸ்எல் என இரண்டு டி20 லீக் தொடர்களிலும் இடம்பெற்று விளையாடியுள்ளார். 2016 ஐபிஎல் சீசனில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் ஒரு பகுதியாக இருந்த கவாஜா, அதேநேரம் கடந்த ஆண்டு பிஎஸ்எல் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்