மும்பை: சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் உடனான தனிப்பட்ட உரையாடலை வெளிப்படுத்திய விவகாரத்தில் விருத்திமான் சஹாவிடம் விசாரணை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியில் தேர்வாகாத விருத்திமான் சஹா சில தினங்கள் முன், பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தனது குற்றச்சாட்டில், "தென்னாப்பிரிக்க தொடரிலேயே என்னை தேர்வு செய்யக் கூடாது என்று தேர்வுக் கமிட்டி எடுத்த முடிவு, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மூலமாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் வலி மாத்திரைகளை எடுத்துக்கொண்டு இந்திய அணியின் வெற்றிக்காக 61 ரன்கள் எடுத்திருந்தேன். இந்த இன்னிங்சிற்கு பிறகு பிசிசிஐ தலைவர் கங்குலி தாதா வாட்ஸ்அப் மூலமாக என்னை பாராட்டினார். 'தான் பிசிசிஐ தலைவராக இருக்கும்வரை இந்திய அணியில் எனக்கு இடம் இருக்கும்' அன்று அவர் எனக்கு உறுதியளித்தார். தாதாவின் அந்த உறுதி எனக்குள் புது நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் முடிந்ததும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாய் என்னைத் தொடர்புகொண்டார். நாங்கள் பேச ஆரம்பித்ததும், ராகுல் பாய் 'இதை உங்களுக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை. அண்மைய காலமாக, ஒரு சில தேர்வாளர்களும் அணி நிர்வாகமும் புதிய விக்கெட் கீப்பரை முயற்சிப்பது குறித்து பரிசீலித்து வருகிறார்கள்' என்றார். இலங்கை தொடருக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பு குறைவு என்பதை வெளிப்படுத்திய ராகுல் பாய், வேறு எந்த முடிவையும் (ஓய்வு) எடுக்க விரும்பினால், நீங்கள் பரிசீலிக்கலாம்' என என்னிடம் தெரிவித்தார்" என்று பகிரங்கமாக கூறினார்.
பொதுவாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய ஒப்பந்த விதி 6.3-ன் படி 'பிசிசிஐயால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள், விளையாட்டு அமைப்பின் அதிகாரிகள், போட்டிகள், போட்டிகளில் நடந்த சம்பவங்கள், அலுவல்ரீதியான தகவல்கள், தொழில்நுட்பங்கள், வீரர்களின் தேர்வு விஷயங்கள் உட்பட விளையாட்டு தொடர்பான வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் எந்த ஊடகத்திலும் கருத்து பகிரக்கூடாது. அப்படி பகிர்ந்தால் அது விதிமீறலாக கருதப்படும். பிசிசிஐயின் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் விருத்திமான் சஹா 'பி' பட்டியலில் ஆண்டுக்கு ரூ.3 கோடி பெற்றுவருகிறார். இப்படியான நிலையில், அவர் ஊடகங்களில் பிசிசிஐ செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் பேசியதை விதிமீறலாக கருதி விருத்திமான் சஹாவிடம் விசாரணை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
» ஐபிஎல் 2022 மார்ச் 26ம் தேதி தொடக்கம்: மகாராஷ்டிராவில் லீக் போட்டிகள் நடத்த திட்டம்
» 'கிரிக்கெட்டை தாண்டி நீங்கள் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்' - யுவராஜ் சிங் குறித்து விராட் கோலி
சஹா மீதான விசாரணையை உறுதிப்படுத்திய பிசிசிஐ அதிகாரி அருண் துமால், "ஒப்பந்தம் செய்யப்பட்ட கிரிக்கெட் வீரராக இருப்பதால், விருத்திமானிடம் பிசிசிஐ விளக்கம் கேட்க வாய்ப்பு உள்ளது. முறையான ஷோகாஸ் நோட்டீஸை வழங்கலாமா அல்லது பிரச்சினை குறித்து அவரிடம் வாய்மொழியாகக் கேட்கலாமா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. சில நாட்களில் அதுதொடர்பாக முடிவு செய்யப்பட்டு அவருக்கு அழைப்பு விடுப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago