சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி: ஜப்பானை திக்கித் திணறி வீழ்த்தியது இந்திய அணி

மலேசியாவின் இபோவில் நடைபெறும் மதிப்பு மிக்க சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி தொடரின் முதல் போட்டியில் ஜப்பான் அணியை இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வீழ்த்தியது.

இந்திய அணியின் ஆட்டம் நம்பிக்கையளிப்பதாக அமையவில்லை. அதுவும் ஜப்பான் அணியின் 18 வீரர்கள் கொண்ட அணியில் 9 வீரர்கள் புதுமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகப்பட்ட வாய்ப்புகளை கோலுக்கு வெளியே அடித்த இந்திய அணி, ஜப்பான் 1-0 என்று அதிர்ச்சி முன்னிலை பெற்ற பிறகு 24-ம் நிமிடம் ஹர்மன்பிரீத் சிங்கின் பெனால்டி கார்னர் கோல் மற்றும் கேப்டன் சர்தார்சிங்கின் 32-வது நிமிட ரிவர்ஸ் ஷாட் கோல் மூலம் 2 கோல்கள் அடித்து நிம்மதிப் பெருமூச்சுடன் முழு புள்ளிகளைப் பெற்றது.

தொடக்கத்திலிருந்தே இளம் ஜப்பான் அணி இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்தது. ஜப்பான் எல்லைக்குள் நுழைய முடிந்தாலும் கோல் போடும் பகுதிக்குள் இந்திய வீரர்கள் நுழைய முடியாமல் ஜப்பான் தடுப்பு உத்தி அபாரமாக அமைந்தது. அதே வேளையில் இந்திய கோல் தடுப்பணை வீரர்களுக்கு ஜப்பான் அணிகடும் நெருக்கடிகளை தொடக்கத்தில் கொடுத்ததும் நடந்தது.

இந்நிலையில் ரமன் தீப் சிங்கின் குறுக்கு ஷாட் ஒன்றை எஸ்.வி.சுனில் அடிக்க அது கோலுக்கு வெளியே சென்றது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் ஜப்பான் முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பெற்றது. அதனை ஜப்பான் வீர்ர் கிடாஸாட்டோ மிக அருமையாக ‘பிளிக்’ செய்து இந்திய கோல் கீப்பர் ஹர்ஜோத் சிங்கிற்கு இடது புறமாக அடித்து கோலாக மாற்றி முன்னிலை பெற்றுத் தந்தார்.

அதிர்ச்சியடைந்த இந்திய அணி பிறகு சற்றே உத்வேகம் காட்டியது. இதனையடுத்து ஜப்பானுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படுத்தியது. அதன் பலனாக 24-ம் நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை ஹர்மன்ப்ரீத் அருமையாக கோலாக மாற்றினார்.

செகண்ட் ஹாஃபில் 2-வது நிமிடத்தில் கேப்டன் சர்தார் சிங், வலது புறத்திலிருந்து ஜஸ்ஜித் சிங் குலார் கொடுத்த ஒரு குறைதூர பாஸை ரிவர்ஸ் ஷாட்டில் ஜப்பான் கோல் கீப்பர் டகாஷி யோஷிகவாவை முறியடித்து கோலாக மாற்றினார்.

அதன் பிறகும் கூட இரண்டுக்கும் மேற்பட்ட கோல் வாய்ப்புகள் இந்திய அணிக்குக் கிடைத்தது, ஆனால் இந்திய அணியினர் ஷாட் அடிக்கும் நிலையில் இல்லை. இவ்வாறு உற்சாகமான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில் நாளை (வியாழன்) உலக சாம்பியன்களான ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான் அணி மற்றொரு போட்டியில் கனடாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிக்கணக்கைத் தொடங்கியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்