பெங்களூரு: நேற்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹேமர்மேன் ஹக் எட்மீட்ஸ் இலங்கை வீரர் வணிந்து ஹசரங்காவை ஏலம் அறிவித்தபோது மயங்கி கீழே விழுந்தார். அவருக்குப் பதிலாக, நேற்று ஏலத்தை நடத்தியவர் பிரபல விளையாட்டு வர்ணனையாளர் சாரு சர்மா.
ஹக் எட்மீட்ஸ் போலவே ஏலத்தை சுவாரஸ்யமாகவும், நேர்த்தியாகவும் கொண்டுச்சென்றார் சாரு. இதற்காக நெட்டிசன்கள் அவரை பாராட்டு மழையில் நனைத்துக் கொண்டிருக்கிறார்கள். சாரு திடீரென ஏல பொறுப்பை ஏற்றத்தின் பின்னணி சற்று சுவாரஸ்யமானது. பெங்களூருவில் வசிக்கும் சாருவின் வீடு ஐபிஎல் ஏலம் நடந்த ஐடிசி கார்டேனியா ஹோட்டலில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவிலேயே உள்ளது. ஹக் எட்மீட்ஸ் உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு சாருவை போனில் அழைத்துள்ளார் அவரது பழைய நண்பர் பிரிஜேஷ் படேல். பிரிஜேஷ் தான் தற்போது ஐபிஎல் நிர்வாக தலைவர். அவர் அழைத்தபோது, சாரு மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளார்.
வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருந்ததால் டிவியில் ஏலத்தை பார்க்காமல், அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்திக்கொண்டிருந்த போது பேசிய பிரிஜேஷ், 'எங்கே இருக்கிறாய்' என கேட்டுவிட்டு, 'இங்கே அவசரமாக கிளம்பி வா' என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்துள்ளார். 15 - 20 நிமிடங்களில் ஐடிசி கார்டேனியா ஹோட்டலுக்கு வந்த சாருவிடம் எட்மீட்ஸ் உடல்நிலை சரியில்லாமல் போன விவரம் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும், சாருவை ஏலத்தை தொடர்ந்து நடத்தும்படியும் கேட்டுள்ளார்கள். அவர் ஒப்புக்கொண்டதும், 15 நிமிடங்கள் ஏல விவரங்களை எடுத்துச்சொல்லியுள்ளனர். இதன்பிறகே சாரு சர்மா ஏலத்தை தடையில்லாமல் நடத்தினார்.
சாரு சர்மாவுக்கு ஏலம் நடத்துவது இது ஒன்றும் புதியது கிடையாது. அவரும் ஒரு வழக்கமான ஏலதாரர். பல லீக்குகளுக்கு நிறைய ஏலங்களை நடத்தியுள்ளார். விளையாட்டு மட்டுமல்ல கலைப்பொருட்களுக்கான ஏலங்களை நடத்தியுள்ளார். பெங்களூரில் உள்ள பிட் அண்ட் ஹேமர் என்ற கலைக்கூடத்திற்கு ஏலம் நடத்துபவரும் சாருவே. இது கடந்த காலத்தில் செய்த வேலை என்பதால் இது அவருக்கு எளிதாக இருந்தது. ஐபிஎல் போன்ற மெகா ஏலங்களை சாரு சர்மா நடத்தியது இதுவே முதல்முறை. எனினும், அதனை சிறப்பாக செய்து முடித்தார்.
» ரூ.10.75 கோடிக்கு பெங்களூரு வசம் வனிந்து ஹசரங்கா... அணிகள் வரிந்துகட்டியதன் பின்னணி என்ன?
புரோ கபடி லீக்கின் இயக்குனரான சாரு சர்மா விளையாட்டு வர்ணனை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பலவற்றை நடத்தி புகழ்பெற்றவர். பல தொலைக்காட்சிகளுக்கு விருது நிகழ்ச்சிகள் மற்றும் கார்ப்பரேட் நிகழ்வுகளை தொகுத்து வழங்கியுள்ளார். 2003 ஆம் ஆண்டு ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை நிகழ்ச்சிகளை நடிகை மந்திரா பேடியுடன் தொகுத்து வழங்கியது அவரை வெளியுலகில் பிரபலமாக்கியது. கடந்த காலங்களில் ஐபிஎல்லில் நிர்வாகப் பொறுப்பிலும் சாரு சர்மா இருந்துள்ளார்.
2008ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டவர், அந்த சீசனில் அணியின் மோசமான தோல்விக்கு பிறகு பதவியை விட்டு விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பொதுவாக விளையாட்டு வர்ணனையாளராக அறியப்படும் அவரை பற்றி தெரியாத மற்றொரு பின்புலம் அவர் ஒரு ஸ்பிரிங்போர்டு டைவிங் சாம்பியன். இந்தியாவில் பிரபலமில்லாத ஸ்பிரிங்போர்டு டைவிங் விளையாட்டில் தனது 18வது வயதிலேயே சாம்பியன் ஆனவர் சாரு. ஆனால் அதன்பின் மிக இளம்வயதிலேயே அந்த விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்று வர்ணனை பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.
இன்றும் இவரே ஐபிஎல் ஏலத்தை நடத்தவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago