IPL Auction 2022 | ஸ்ரேயாஷ் முதல் ஷாருக்கான் வரை - முதல் நாள் ஏலத்தில் கவனம் ஈர்த்தவர்கள் பட்டியல்!

By செய்திப்பிரிவு

பெங்களூரு: 2022 ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் முதல் நாள் முடிவடைந்துள்ளது. கடைசிநேரத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத இளம்வீரர்களுக்கான ஏலம் நடந்தது. இதில் முதல் ஆளாக, கடந்த சீசனில் பெங்களூரு அணிக்கு கீப்பராக இருந்த கேஎஸ் பரத்தை ரூ.2 கோடிக்கு வாங்கியது டெல்லி அணி.

இதேபோல், உத்தராகண்ட் வீரர் அனுஜ் ராவத் பெங்களூரு அணியால் ரூ.3.4 கோடிக்கு வாங்கப்பட்டார். பிரப்சிம்ரன் சிங்கை பஞ்சாப் அணி ரூ.60 லட்சத்துக்கு வாங்கியது. குஜராத்தின் ஷெல்டன் ஜாக்சன் கொல்கத்தா அணியால் ரூ.60 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். கேரளா வீரர் பாசில் தம்பியை ரூ.30 லட்சத்துக்கு மும்பை அணி தன் வசமாக்கியது. கார்த்திக் தியாகியை ரூ 4 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். பீகாரின் ஆகாஷ் தீப் ரூ.20 லட்சத்துக்கு ஆர்சிபி வசம் சென்றார்.

கே.எம்.ஆசிப்பை, ரூ 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது சென்னை அணி. கடந்த சீசனில் டெல்லி அணியில் முக்கிய பவுலராக இருந்த ஆவேஷ் கானை ரூ 10 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். இந்த ஐபிஎல் ஏலத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஒரு வீரர் அதிக தொகை ஏலம் எடுக்கப்பட்டார் என்றால் அது ஆவேஷ் கான் தான். இஷான் போரல் ரூ.25 லட்சத்துக்கு பஞ்சாப் எடுத்தது. துஷார் தேஷ்பாண்டேவை, ரூ 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது சென்னை அணி. வேகப்பந்துவீச்சாளர் அங்கீத் ராஜ்புத்தை ரூ.50 லட்சத்துக்கு லக்னோ தான் வசமாகியது.

மிகக்குறைந்த வயது கொண்ட ஆப்கானிஸ்தானின் நூர் அகமதுவை ரூ.30 லட்சத்துக்கு குஜாரத் வாங்கியது. தமிழக வீரர் முருகன் அஷ்வினை ரூ1.6 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை அணி. கேசி கரியப்பாவை ரூ.30 லட்சத்துக்கு ராஜஸ்தான் அணியும், ஸ்ரேயாஷ் கோபால் மற்றும் சுசீந்த்தை முறையே ரூ.75 லட்சம் மற்றும் ரூ.20 லட்சத்துக்கு ஹைதராபாத் அணியும், சாய் கிஷோரை ரூ.3 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும் வாங்கின.

ஐபிஎல் ஏலம் 2022 - இதுவரை...

> ஸ்ரேயாஸ் ஐயர் - ரூ.12.25 கோடி (கொல்கத்தா)
> ட்ரென்ட் பவுல்ட் - ரூ.8 கோடி (ராஜஸ்தான்)
> ஷிகர் தவானை ரூ.8.25 கோடி (பஞ்சாப்)
> அஸ்வின் ரூ.5 கோடி (ராஜஸ்தான்)
> ரபாடாவை ரூ.9.25 கோடி (பஞ்சாப் )
> முகமது ஷமி - ரூ.6 கோடி (​குஜராத்)
> டி காக் - ரூ.6.75 கோடி (லக்னோ)
> டு ப்ளேசிஸ் - ரூ.7 கோடி (பெங்களூரு)
> டேவிட் வார்னர் - ரூ.6.25 கோடி (டெல்லி)
> மணிஷ் பாண்டே - ரூ.4.60 கோடி (லக்னோ)
> ஷிம்ரோன் ஹெட்மெய்ர் - ரூ.8.50 கோடி (டெல்லி)
> ராபின் உத்தப்பா - ரூ.2 கோடி (சென்னை)
> ஜேசன் ராய் - ரூ.2 கோடி (குஜராத்)
> தேவ்தூத் படிக்கல் - ரூ.7.75 கோடி (ராஜஸ்தான்)
> ப்ராவோ - ரூ.4.40 கோடி (சென்னை)
> நிதிஷ் ரானா - ரூ.8 கோடி (கொல்கத்தா)
> ஜேசன் ஹோல்டர் - ரூ.8.75 கோடி (லக்னோ)
> ஹர்ஷால் படேல் - ரூ.10.75 கோடி (பெங்களூரு)
> வனிந்து ஹசரங்கா - ரூ.10.75 கோடி (பெங்களூரு)
> வாஷிங்டன் சுந்தர் - ரூ.8.75 கோடி (ஹைதராபாத்)
> குர்னால் பாண்டியா - ரூ.8.25 கோடி (லக்னோ)
> இஷான் கிஷன் - ரூ.15.25 கோடி (மும்பை)
> நிகோலஸ் பூரன் - ரூ.10.75 கோடி (ஹைதராபாத்)
> வாஷிங்டன் சுந்தர் - ரூ.8.75 கோடி (ஹைதராபாத்)
> குர்னால் பாண்டியா - ரூ.8.25 கோடி (லக்னோ)
> அம்பத்தி ராயுடு - ரூ.6.75 கோடி (சென்னை)
> மிட்சல் மார்ஷ் - ரூ.6.5 கோடி (டெல்லி)
> ஜானி பேர்ஸ்டோவ் - ரூ.6.75 கோடி (பஞ்சாப்)
> தினேஷ் கார்த்திக் - ரூ.5.50 கோடி (பெங்களூரு)
> நடராஜன் - ரூ.4 கோடி (ஹைதராபாத்)
> தீபக் சஹார் - ரூ.14 கோடி (சென்னை)
> பிரசித் கிருஷ்ணா - ரூ.10 கோடி (ராஜஸ்தான்)
> லாக்கி பெர்குசன் - ரூ.10 கோடி (குஜராத்)
> ஜாஷ் ஹேசில்வுட் - ரூ.7.75 கோடி (பெங்களூரு)
> மார்க்வுட் - ரூ.7.5 கோடி (லக்னோ)
> புவனேஷ்வர் குமார் - ரூ.4.2 கோடி (ஹைதராபாத்)
> ஷர்துல் தாகூர் - ரூ.10.75 கோடி (டெல்லி)
> முஸ்தபிஸுர் ரஹ்மான் - ரூ.2 கோடி (டெல்லி)
> குல்தீப் யாதவ் - ரூ.2 கோடி (டெல்லி)
> ராகுல் சஹார் - ரூ.5.25 கோடி (பஞ்சாப்)
> சஹால் - 6.5 கோடி (ராஜஸ்தான்)
> பிரியம் கார்க் - ரூ.20 லட்சம் (ஹைதராபாத்)
> அபினவ் சதராங்கனி - ரூ.2.6 கோடி (குஜராத்)
> டெவால்ட் ப்ரீவிஸ் - ரூ.3 கோடி (மும்பை)
> அஸ்வின் ஹெப்பார் - ரூ.20 லட்சம் (டெல்லி)
> ராகுல் திரிபாதி - ரூ.8.5 கோடி (ஹைதராபாத்)
> ரியான் பராக் - ரூ.3.8 கோடி (ராஜஸ்தான்)
> அபிஷேக் சர்மா - ரூ.6.5 கோடி (ஹைதராபாத்)
> ஷாருக் கான் - ரூ.9 கோடி (பஞ்சாப்)
> ஷிவம் மாவியை - ரூ.7.25 கோடி (கொல்கத்தா)
> ராகுல் தெவட்டியா - ரூ.9 கோடி (குஜராத்)
> கமலேஷ் நாகர்கோட்டி - ரூ.1.1 கோடி (டெல்லி)
> ஹர்ப்ரீத் ப்ரார் - ரூ.3.8 கோடி(பஞ்சாப் )
> ஷாபாஸ் அஹமது - ரூ.2.4 கோடி (பெங்களூரு)
> சர்பராஸ் கான் - ரூ.20 லட்சம் (டெல்லி)


2022 ஏலம் தொடங்குவதற்கு முன்பு ஐபிஎல் அணிகள் வசமிருந்த ஏல இருப்புத் தொகை விவரம்:

> பஞ்சாப் கிங்ஸ் (PBKS): ரூ.72 கோடி
> சன்ரைஸர் ஹைதராபாத் (SRH): ரூ.68 கோடி
> ராஜஸ்தான் ராயல்ஸ் (RR): ரூ.62 கோடி
> லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG): ரூ.59 கோடி
> ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB): ரூ.57 கோடி
> குஜராத் டைட்டன்ஸ்:ரூ.52 கோடி
> சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): ரூ.48 கோடி
> கொல்த்தா நைட் ரைடர்ஸ் (KKR):ரூ.48 கோடி
> மும்பை இந்தியன்ஸ் (MI):ரூ.48 கோடி
> டெல்லி கேப்பிடல்ஸ் (DC): ரூ.47.5 கோடி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்