IPL Auction 2022 | விறுவிறுப்பில்லாத 6-வது சுற்று: ஸ்பின்னர்களை வாங்க ஆர்வம் காட்டாத உரிமையாளர்கள்!

By செய்திப்பிரிவு

பெங்களூரு: 2022 ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐந்து சுற்றுகள் முடிவில் நட்சத்திர வீரர்கள், பேட்ஸ்மேன்கள், ஆல் ரவுண்டர்கள், கீப்பர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் விற்பனை நிறைவு பெற்றது. ஆறாவது சுற்றில் சுழற்பந்துவீச்சாளர்கள் ஏலம் விடப்பட்டனர். பெரும்பாலும் இந்தச் சுற்றில் அணி உரிமையாளர்கள் ஆர்வம் காட்டாததால் ஏலம் விறுவிறுப்பில்லாமல் இருந்தது.

இந்த சுற்றில் முதல் நபராக வந்த இங்கிலாந்து வீரர் அடில் ரஷீத்தும், இரண்டாவது நபராக அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் முஜீப் சத்ரனும், மூன்றாவது நபராக அதிக வயதுகொண்ட இம்ரான் தாஹீரும் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.

இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் டெல்லி அணியால் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டார். கடந்த சீசனில் மும்பை அணியின் துருப்பு சீட்டாக இருந்த ராகுல் சஹார் இம்முறை பஞ்சாப் அணியால் ரூ.5.25 கோடிக்கு வாங்கப்பட்டார். மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் சஹாலை 6.5 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த சுற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் இவரே. இந்த சுற்றில் அணிகளால் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் இந்த மூவரும்தான். மொத்தம் 8 சுழற்பந்துவீச்சாளர்கள் ஏலத்தில் இடம்பெற்றத்தில் ஐந்து வீரர்களை எந்த அணியும் வாங்கவில்லை. அடில் ரஷீத், முஜீப் சத்ரன், இம்ரான் தாஹீர் ஆகியோருடன் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பா, இந்திய வீரர் அமித் மிஸ்ரா போன்றோரும் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.

ஐபிஎல் ஏலம் 2022 - இதுவரை...

> ஸ்ரேயாஸ் ஐயர் - ரூ.12.25 கோடி (கொல்கத்தா)
> ட்ரென்ட் பவுல்ட் - ரூ.8 கோடி (ராஜஸ்தான்)
> ஷிகர் தவானை ரூ.8.25 கோடி (பஞ்சாப்)
> அஸ்வின் ரூ.5 கோடி (ராஜஸ்தான்)
> ரபாடாவை ரூ.9.25 கோடி (பஞ்சாப் )
> முகமது ஷமி - ரூ.6 கோடி (​குஜராத்)
> டி காக் - ரூ.6.75 கோடி (லக்னோ)
> டு ப்ளேசிஸ் - ரூ.7 கோடி (பெங்களூரு)
> டேவிட் வார்னர் - ரூ.6.25 கோடி (டெல்லி)
> மணிஷ் பாண்டே - ரூ.4.60 கோடி (லக்னோ)
> ஷிம்ரோன் ஹெட்மெய்ர் - ரூ.8.50 கோடி (டெல்லி)
> ராபின் உத்தப்பா - ரூ.2 கோடி (சென்னை)
> ஜேசன் ராய் - ரூ.2 கோடி (குஜராத்)
> தேவ்தூத் படிக்கல் - ரூ.7.75 கோடி (ராஜஸ்தான்)
> ப்ராவோ - ரூ.4.40 கோடி (சென்னை)
> நிதிஷ் ரானா - ரூ.8 கோடி (கொல்கத்தா)
> ஜேசன் ஹோல்டர் - ரூ.8.75 கோடி (லக்னோ)
> ஹர்ஷால் படேல் - ரூ.10.75 கோடி (பெங்களூரு)
> வனிந்து ஹசரங்கா - ரூ.10.75 கோடி (பெங்களூரு)
> வாஷிங்டன் சுந்தர் - ரூ.8.75 கோடி (ஹைதராபாத்)
> குர்னால் பாண்டியா - ரூ.8.25 கோடி (லக்னோ)
> இஷான் கிஷன் - ரூ.15.25 கோடி (மும்பை)
> நிகோலஸ் பூரன் - ரூ.10.75 கோடி (ஹைதராபாத்)
> வாஷிங்டன் சுந்தர் - ரூ.8.75 கோடி (ஹைதராபாத்)
> குர்னால் பாண்டியா - ரூ.8.25 கோடி (லக்னோ)
> அம்பத்தி ராயுடு - ரூ.6.75 கோடி (சென்னை)
> மிட்சல் மார்ஷ் - ரூ.6.5 கோடி (டெல்லி)
> ஜானி பேர்ஸ்டோவ் - ரூ.6.75 கோடி (பஞ்சாப்)
> தினேஷ் கார்த்திக் - ரூ.5.50 கோடி (பெங்களூரு)
> நடராஜன் - ரூ.4 கோடி (ஹைதராபாத்)
> தீபக் சஹார் - ரூ.14 கோடி (சென்னை)
> பிரசித் கிருஷ்ணா - ரூ.10 கோடி (ராஜஸ்தான்)
> லாக்கி பெர்குசன் - ரூ.10 கோடி (குஜராத்)
> ஜாஷ் ஹேசில்வுட் - ரூ.7.75 கோடி (பெங்களூரு)
> மார்க்வுட் - ரூ.7.5 கோடி (லக்னோ)
> புவனேஷ்வர் குமார் - ரூ.4.2 கோடி (ஹைதராபாத்)
> ஷர்துல் தாகூர் - ரூ.10.75 கோடி (டெல்லி)
> முஸ்தபிஸுர் ரஹ்மான் - ரூ.2 கோடி (டெல்லி)

2022 ஏலம் தொடங்குவதற்கு முன்பு ஐபிஎல் அணிகள் வசமிருந்த ஏல இருப்புத் தொகை விவரம்:

> பஞ்சாப் கிங்ஸ் (PBKS): ரூ.72 கோடி
> சன்ரைஸர் ஹைதராபாத் (SRH): ரூ.68 கோடி
> ராஜஸ்தான் ராயல்ஸ் (RR): ரூ.62 கோடி
> லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG): ரூ.59 கோடி
> ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB): ரூ.57 கோடி
> குஜராத் டைட்டன்ஸ்:ரூ.52 கோடி
> சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): ரூ.48 கோடி
> கொல்த்தா நைட் ரைடர்ஸ் (KKR):ரூ.48 கோடி
> மும்பை இந்தியன்ஸ் (MI):ரூ.48 கோடி
> டெல்லி கேப்பிடல்ஸ் (DC): ரூ.47.5 கோடி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்