பெங்களூரு: 2022 ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மார்கியூ எனப்படும் நட்சத்திர வீரர்கள் விற்பனை நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் சுற்று ஏலம் தொடங்கி நடந்துவந்தது. இலங்கை வீரர் ஹசரங்கா ஏலம் நடந்துகொண்டிருக்கும்போது ஏலத்தை நடத்தி வந்த ஹேமர்மேன் ஹக் எட்மீட்ஸ் மேடையிலேயே மயக்கமடைந்ததையடுத்தால் தடைபட்டது. பின்னர் உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டு, எட்மீட்ஸ்க்கு பதிலாக சாரு ஷர்மாவை ஐபிஎல் நிர்வாகம் புதிய ஏலம் நடத்துபவராக அறிவித்தது.
ஸ்ரேயாஸ் ஐயரை முந்திய இஷான் கிஷன்: கடந்த முறை மும்பை அணிக்காக விளையாடிய இஷான் கிஷனை ஏலம் எடுப்பத்த்தில் கடும் போட்டி நிலவியது. ஆரம்பம் முதலே மும்பை அணி அவரை எடுப்பதில் ஆர்வம் காட்டியது. மும்பையுடன் குஜராத்தும் போட்டி போட ரூ.13 கோடியை தாண்டிச் சென்றது. இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் ஆர்வம் காட்டியது. இதனால் போட்டி மும்பைக்கும் - ஹைதராபாத்துக்கும் சென்றது. இதனால், அதிகபட்சமாக தொகையாக ரூ.15.25 கோடிக்கு ஏலம் எடுத்து மும்பை அணியே இஷான் கிஷனை தக்கவைத்துக்கொண்டது. இன்றைய ஏலத்தில் இதுவரை அதிகதொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் இவரே.
இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவ்வை பஞ்சாப் அணி ரூ.6.75 கோடிக்கு வாங்கியது. தமிழகத்தைச் சேர்ந்த வீரர் தினேஷ் கார்த்திக் ரூ.5.50 கோடிக்கு பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார். மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிகோலஸ் பூரனை ரூ.10.75 கோடி கொடுத்து ஹைதராபாத் அணி வாங்கியது.
முன்னதாக, மிட்சல் மார்ஷை 6.5 கோடிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி வாங்கியது. இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடுவை 6.75 கோடிக்கு சென்னை அணி வாங்கியது.
அதேநேரம், ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. டி20 போட்டிகளில் 300 விக்கெட்கள் வீழ்த்திய அவரை யாரும் வாங்க முன்வரவில்லை. மேலும், இந்திய வீரர் விரித்திமான் சஹா மற்றும் இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸையும் எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டவில்லை.
ஐபிஎல் ஏலம் 2022 - இதுவரை...
> ஸ்ரேயாஸ் ஐயர் - ரூ.12.25 கோடி (கொல்கத்தா)
> ட்ரென்ட் பவுல்ட் - ரூ.8 கோடி (ராஜஸ்தான்)
> ஷிகர் தவானை ரூ.8.25 கோடி (பஞ்சாப்)
> அஸ்வின் ரூ.5 கோடி (ராஜஸ்தான்)
> ரபாடாவை ரூ.9.25 கோடி (பஞ்சாப் )
> முகமது ஷமி - ரூ.6 கோடி (குஜராத்)
> டி காக் - ரூ.6.75 கோடி (லக்னோ)
> டு ப்ளேசிஸ் - ரூ.7 கோடி (பெங்களூரு)
> டேவிட் வார்னர் - ரூ.6.25 கோடி (டெல்லி)
> மணிஷ் பாண்டே - ரூ.4.60 கோடி (லக்னோ)
> ஷிம்ரோன் ஹெட்மெய்ர் - ரூ.8.50 கோடி (டெல்லி)
> ராபின் உத்தப்பா - ரூ.2 கோடி (சென்னை)
> ஜேசன் ராய் - ரூ.2 கோடி (குஜராத்)
> தேவ்தூத் படிக்கல் - ரூ.7.75 கோடி (ராஜஸ்தான்)
> ப்ராவோ - ரூ.4.40 கோடி (சென்னை)
> நிதிஷ் ரானா - ரூ.8 கோடி (கொல்கத்தா)
> ஜேசன் ஹோல்டர் - ரூ.8.75 கோடி (லக்னோ)
> ஹர்ஷால் படேல் - ரூ.10.75 கோடி (பெங்களூரு)
> வனிந்து ஹசரங்கா - ரூ.10.75 கோடி (பெங்களூரு)
> வாஷிங்டன் சுந்தர் - ரூ.8.75 கோடி (ஹைதராபாத்)
>குர்னால் பாண்டியா - ரூ.8.25 கோடி (லக்னோ)
2022 ஏலம் தொடங்குவதற்கு முன்பு ஐபிஎல் அணிகள் வசமிருந்த ஏல இருப்புத் தொகை விவரம்:
> பஞ்சாப் கிங்ஸ் (PBKS): ரூ.72 கோடி
> சன்ரைஸர் ஹைதராபாத் (SRH): ரூ.68 கோடி
> ராஜஸ்தான் ராயல்ஸ் (RR): ரூ.62 கோடி
> லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG): ரூ.59 கோடி
> ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB): ரூ.57 கோடி
> குஜராத் டைட்டன்ஸ்:ரூ.52 கோடி
> சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): ரூ.48 கோடி
> கொல்த்தா நைட் ரைடர்ஸ் (KKR):ரூ.48 கோடி
> மும்பை இந்தியன்ஸ் (MI):ரூ.48 கோடி
> டெல்லி கேப்பிடல்ஸ் (DC): ரூ.47.5 கோடி
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago