உயரிய 'லாரஸ்' விருதுக்கான பரிந்துரையில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா

By செய்திப்பிரிவு

ஹரியானா: விளையாட்டு உலகில் சிறப்புமிக்க விருதுகளில் ஒன்றான 'லாரஸ்' விருதுக்கு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்த தடகள வீரர் நீரஜ் சோப்ராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய வரலாறு படைத்திருந்தார். ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். அதன்பின் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று, இந்தியாவுக்கு தங்கம் வென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். அதுமட்டுமல்லாமல் 120 ஆண்டுகளில் ஈட்டி எறிதலில் இந்தியா பெற்ற முதல் தங்கப் பதக்கம் என்ற பெருமையையும் பெற்றுக் கொடுத்தார். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், உலகத் தடகள வரிசையில் ஈட்டி எறிதலில் 14 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தில் உள்ளார் நீரஜ் சோப்ரா.

சாதனை பலவற்றுக்காக அவருக்கு சமீபத்தில் மத்திய அரசு பத்ம விருது அறிவித்தது. அதைத் தொடர்ந்து, தற்போது மற்றொரு உலகப் புகழ் விருதுக்கு நீரஜ் சோப்ரா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 2021-இன் ‘Laureus World Sports Award for Breakthrough of the Year’ விருதுக்கு தான் தற்போது நீரஜ் சோப்ரா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். விளையாட்டு உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான இதன் பரிந்துரைக்கு இதற்கு முன் இந்தியாவில் இரண்டே வீரர்களே பரிந்துரைக்கப்பட்டனர். அதில் ஒருவர் சச்சின். அதேபோல் மற்றொருவர் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாத்.

மூன்றாவது இந்தியராக நீரஜ் சோப்ரா இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் மெத்வதேவ், எம்மா ரடுகானு, ஸ்பானிஷ் கால்பந்தாட்ட வீரர் பெத்ரி கோன்சாலஸ், தடகள வீராங்கனை யூலிமர் ரோஜாஸ், ஆஸ்திரேலிய நாட்டின் நீச்சல் வீராங்கனை அரியர்னே டிட்மஸ் ஆகியோரும் இதே விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நீரஜ் சோப்ரா, "விளையாட்டு உலகின் சிறப்புமிக்க இந்த விருதுக்கு எனது பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை நினைக்கையில் சிறப்பான உணர்வு மேலோங்குகிறது. விளையாட்டு உலகின் சிறந்த வீரர்களுடன் எனது பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்