2022 டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியானது: முதல் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்: அரையிறுதிவரை செல்ல வாய்ப்பு

By செய்திப்பிரிவு


மெல்போர்ன் : ஆஸ்திேரலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.இதில் சூப்பர்-12 பிரிவில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ம் தேதி முதல் நவம்பர் 13ம் ேததிவரை டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்க உள்ளன. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்ட், ஜிலாங், ஹோபர்ட், பெர்த் ஆகிய 7நகரங்களில் உலகக் கோப்பை ஆட்டங்கள் நடக்கின்றன.

இந்த7 நகரங்களிலும் மொத்தம் 45 ஆட்டங்கள் நடக்கின்றன. 16 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பையில் ஏற்கெனவே 12 அணிகள் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 4 அணிகள் விரைவில் உறுதியாகும்.

முதல் சுற்றுப் போட்டிகள் ஜீலாங்கில் உள்ள கர்தினா பார்க்கில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது நமிபியா ஆட்டத்துடன் அக்டோபர் 16ம் தேதி தொடங்குகின்றன. குருப் ஏ பிரிவில் இரு அணிகள் தகுதிச்சுற்று மூலம் தேர்வு பெறும். அதேபோல இரு முறை சாம்பியனான மே.இ.தீவுகள் அணியும் தகுதிச்சுற்று மூலம் சூப்பர்-12 சுற்றுக்கு வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருப்-பி பிரிவில் இடம் பெற்றுள்ள மே.இ.தீவுகள் அணி ஸ்காட்லாந்து, மற்றும் இரு தகுதிச்சுற்று அணிகளுடன் மோதுகிறது.

சூப்பர்-12 சுற்றுகளில் குரூப்-1, மற்றும் குரூப்-2 என இரு பிரிவுகளில் அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குரூப்-1-ல் இங்கிலாந்து, நியூஸிலாாந்து, ஆப்கானிஸ்தான், ஏ-குரூப்பில் முதலிடம் பெறும் அணி, பி குரூப்பில்2-வது இடம் பெறும் அணி தகுதி பெறும்

குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், பி பிரிவில்முதலிடம் பெறும் அணி, ஏ பிரிவில் 2-வது இடம் பெறும் அணி தகுதிபெறும்.

போட்டி நடத்தும் மற்றும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை சிட்னியில் நடக்கும் போட்டியில் சந்திக்கிறது. நவம்பர் 1-ம் தேதி பிரிஸ்பேனில் நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது நியூஸிலாந்து அணி.

கிரிக்கெட் உலகில் பரமவைரிகளாகக் கருதப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கடந்த உலகக் கோப்பையைப் போன்று ஒரே குரூப்பில் உள்ளன. அக்டோபர் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை எம்சிஜி மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில்இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

அக்டோபர் 27-ம் தேதி சிட்னியில் நடக்கும் ஆட்டத்தில் குரூப்-ஏ பிரிவில் 2-வது இடம் பெற்ற அணியுடன் இந்திய அணி மோதுகிறது

அக்டோபர் 30-ம் தேதி பெர்த் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி

அடிலெய்ட் மைதானத்தில் நவம்பர் 2-ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணியுடன் வங்கதேசம் அணி மோதுகிறது.

நவம்பர் 6ம்தேதி மெல்போர்னில் நடக்கும் கடைசி சூப்பர்-12 ஆட்டத்தில் குரூப்-பி பிரிவில் முதலிடம் பெற்ற அணியுடன் இந்திய அணி மோதுகிறது.

இந்திய அணி இடம் பெற்றுள்ள குரூப்-1 பிரிவில் வங்கதேசம், குரூப்-ஏ பிரிவில் 2வது இடம், குரூப்-பி பிரிவில் 2-வது இடம் ஆகிய அணிகளை எளிதாக இந்திய அணியால் தோற்கடிக்க முடியும். தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் இரு அணிகளி்ல் ஒரு அணியை வென்றுவிட்டாலே ஏறக்குறைய இந்திய அணி அரையிறுதிக்கு செல்வது உறுதியாகிவிடும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி சூப்பர்12 சுற்றோடு வெளியேறியதால், உலகக் கோப்பைப் போட்டியில் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது என்பதை ஐசிசி உணர்்ந்துள்ளது. ஆதலால்தான் சூப்பர்-12 சுற்றில் கடைசி ஆட்டத்தை இந்தியா-குரூப்-பி பிரிவில் முதலிடம் அணிகள் மோதும் வகையில் அட்டவணையிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்திய அணி அரையிறுதி செல்வதில் சில சிரமங்கள் இருந்தால் கடைசி லீக் ஆட்டத்தில் சில டார்கெட் வைத்து வென்று அரையிறுதி செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அரையிறுதி ஆட்டங்கள் சிட்னியிலும், அடிலெய்டிலும் நடக்கின்றன, இறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடக்கின்றன.

சூப்பர்-12 பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து,இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாகச் சென்றுவிடும். டி20 தரவரிசையில் 8-வது இடத்துக்குகீழே இருந்த இலங்கை, மே.இ.தீவுகள், ஸ்காட்லாந்து நமிபியா ஆகிய அணிகள் முதல் சுற்றுக்குத் தகுதி பெறும், மீதமுள்ள 4 அணிகள் நடந்துவரும் தகுதி்ச்சுற்று மூலம் முதல்சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்