பார்ல் : இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முன்னாள் கேப்டன் விராட் கோலி முறியடித்துள்ளார்.
பார்ல் நகரில் நேற்று நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி முன்னிலை பெற்றுள்ளது
இந்தப் போட்டியில் முன்னாள் கேப்டன் விராட் கோலி 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் ப தவியை இழந்தபின் கோலி எவ்வாறு விளையாடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தன்னுடைய பேட்டிங் திறமை குறையவில்லை என்பதை நேற்று வெளிப்படுத்தினார்.
ஆனால், இந்திய அணிக்கு கேப்டனாக கோலி இருந்த போது இருந்த அக்ரஸிவ், வீரர்களை உற்சாகப்படுத்துதல், ஒவ்வொரு பேட்ஸமேனுக்கும் ஒவ்வொருவிதமாக பீல்டிங்கை மாற்றி அமைத்தல், விக்கெட் விழுந்தால், துள்ளிக்குதித்து உற்சாகப்படுத்துதல் போன்றவற்றை நேற்றைய போட்டியில் காணவில்லை. விராட் கோலி ஏதோ தன்னை தனிமைப்படுத்திவிட்டதாகவே கருதி இந்த உற்சாகத்தை வெளிப்படுத்தாமலேயே இருந்தார்.
இருப்பினும் கோலியின் அரைசதத்தால் சச்சின் சாதனையை முறியடித்துள்ளார். வெளிநாடுகளில் நடந்த ஒருநாள்போட்டிகளில் அதிகமான் ரன் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற ரீதியில் கோலி 5065 ரன்கள் சேர்த்து சச்சினின் சாதனைையை முறியடித்துள்ளார்.
வெளிநாடுகளில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் வரிசையில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா 5,518 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவகையில் கங்குலி, ராகுல் திராவிட் ஆகியோரின் சாதனையை கோலி 27 ரன்கள் அடைந்தபோதே கடந்துவிட்டார். தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 1,287 ரன்கள் சேர்த்து 2-வது இடத்தில் உள்ளார். சச்சின் 2,001 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களில் கோலி 6-வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் சச்சின், 2-வது இடத்தில் பாண்டிங்(1879), சங்கக்கரா(1,789) ஸ்டீவ் வாஹ்(1581), சந்தர்பால்(1,559) ரன்களுடன் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
39 mins ago
விளையாட்டு
48 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago