டெஸ்ட் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா: பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் வெற்றியை பறிகொடுத்த இந்திய அணி

By க.போத்திராஜ்


கேப் டவுன் : இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் வென்று வரலாற்றை மாறவிடாமல் தென் ஆப்பிரிக்க அணி தக்கவைத்தது.

கேப்டவுனில் நடந்த கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்க அணி.

தென் ஆப்பிரி்க்க அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான ரபாடா, இங்கிடி, ஜேஸன், ஆலிவர் ஆகியோர் வெற்றிக்கு பெரும்பங்கு வகித்தனர். இதைவிட, கீகன் பீட்டர்ஸன், டூசென், பும்மா, எல்கர் ஆகியோரும் வெற்றியை இந்திய அணியிடம் இருந்து பறித்தனர். ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது கீகன் பீட்டர்ஸனுக்கு வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி 24 புள்ளிகள், 66.66 சதவீதத்துடன் 4-வது இடத்துக்குமுன்னேறியது. இந்திய அணி, 53 புள்ளிகள் எடுத்தபோதிலும், 49 சதவீதத்துடன் 5-வது இடத்துக்குபின் தங்கியது.

இ்ந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் வென்றபின் அந்தத் தொடரை இழப்பது என்பது அரிதான நிகழ்வாக இருந்துள்ளது.கடைசியாக 2012-13ம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் செய்த இங்கிலாந்து அணியை முதல் டெஸ்டில் தோற்கடித்து அதன்பின் அந்தத் தொடரை இந்திய அணி இழந்தது. இதுதான் கடைசியாக இருந்தது அதன்பின் இந்திய அணி முதல் டெஸ்டில் தோற்று, அதன்பின் டெஸ்ட் தொடரை இழந்தது இல்லை. ஏறக்குறைய 10ஆண்டுகளுக்குப்பின் இப்போது தென் ஆப்பிரி்க்காவிடம் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.

இந்திய அணியைப் பொறுத்தவரை வெற்றிகளை மட்டும் பேட்ஸ்மேன்கள் சுமந்து கொண்டு தோல்விகளை எல்லாம் பந்துவீச்சாளர்களை சுமக்க வைக்கும் சம்பவங்கள்தான் கடந்த சில ஆண்டுகளாக நடக்கின்றன. அப்படி பெறும் வெற்றி கூடபந்துவீச்சாளர்களால்தான் பெறும் வெற்றியாக இருந்திருக்கிறது.

இந்தப் போட்டியிலும் பந்துவீச்சாளர்கள் தங்களின் பங்களிப்பை முதல் இன்னிங்ஸில் சிறப்பாகச் செய்தனர். ஆனால், 2-வது இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் 8 பேர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தது பொறுப்பற்ற தனத்தின் உச்சகட்டம். இத்தனைக்கும் டெஸ்ட் போட்டியில் சுவர் எனச் சொல்லக்கூடிய திராவிட் பயிற்சியின் கீழ் பேட்ஸ்மேன்கள் சோடைபோவது ஆய்வுக்குரியது.

3-வது டெஸ்ட் போட்டியிலும், 2-வது டெஸ்ட் போட்டியிலும் தோல்விக்கு முக்கியக் காரணம் பேட்ஸ்மேன்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. 2-வது இன்னிங்ஸில் கூடுதலாக 100 ரன்களை அடித்திருந்தாலே ஆட்டத்தை பந்துவீச்சாளர்கள் இந்தியா பக்கம் திருப்பியிருப்பார்கள். தொடரின் தொடக்கத்தில் முன்னிலை வகித்துவிட்டு, பின்னர் தொடரையே கோட்டைவிடுவது பொறுப்பற்ற பேட்டிங்கின் உச்சகட்டம்.

மூத்த வீரர்கள் எனச் சொல்லிக்கொண்டு வலம்வந்த புஜாரா, ரஹானே, கேப்டன் கோலி, அகர்வால் என யாரும் சோபிக்கவில்லை. ரிஷப்பந்த் இருபோட்டிகளாக சுமாராக ஆடினாலும் கடைசி டெஸ்டில் அற்புதமான, குறைகூறா இன்னிங்ஸை ஆடிக்கொடுத்தார். மற்றவகையில் இந்திய அணியிடம் இருந்து பெரிதாக இந்தத் தொடரில் எதிர்பார்க்க ஒன்றுமில்லை.

அடுத்துவரும் டெஸ்ட் தொடரில் ரஹானே, புஜாரா, அகர்வால், விராட் கோலி இல்லாத அணியாக இந்திய அணி இருந்தால், நிச்சயம் வெற்்றி பெறும். இந்த சுமைகளை எல்லாம் பந்துவீச்சாளர்கள் தாங்கிச் செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகிறார்கள்.

தென் ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றவுடன் அவசரஅவசரமாக டீ காக் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும், டீகாக் இல்லாமலும் தொடரை வெல்ல முடியும் என நிரூபித்துள்ளது தென் ஆப்பிரிக்கா.

இதற்கு முக்கியக் காரணம் ராக்கெட் ரபாடா, ஜேஸன், ஆலிவர், இங்கிடி ஆகிய 4 வேகப்பந்துவீச்சாளர்கள்தான். அதிலும் ராக்கெட் ரபாடா 2-வது டெஸ்ட் போட்டியில் இ்ந்திய அணியின் பேட்டிங்கை நிலைகுலைய வைத்துவி்ட்டார். 3-வது டெஸ்டில் 4 முனைத் தாக்குலில் சிக்கி இந்திய அணி சின்னாபின்னமாகியது.

தென் ஆப்பிரிக்க அணி இந்தத் தொடரில் இரு வீரர்களைக் கண்டறிந்துள்ளது. முதலாவது கீகன் பீட்டர்ஸன் உள்நாட்டுப்போட்டிகளில் சிறப்பாக ஆடிய அவருக்கு வாய்ப்பளித்தது, அதை பீட்டர்ஸன் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு, நிலையான இடத்தைப் பிடித்துவிட்டார். 2-வது, பந்துவீச்சு ஆல்ரவுண்டர், இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மார்கோ ஜேஸன். இருவருமே தென் ஆப்பிரிக்க அணிக்கு கிடைத்த முத்துக்களாவர்.
இதில் இந்திய அணியின் நல்லகாலம், ஆன்ரிச் நோர்க்கியா டெஸ்ட், ஒருநாள் தொடருக்கு இல்லை. அவர் இருந்திருந்தால் 3 நாட்களிலேயே போட்டி முடிந்திருக்கும்.

முன்னதாக முதல் இன்னிங்ஸில் இ்ந்திய அணி 223 ரன்களும், தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களிலும் ஆட்டமிழந்தன. 2-வது இன்னி்ங்ஸில் இந்திய அணி 198 ரன்களுக்கு ஆட்டமிழந்து 212 ரன்கள் இலக்காக தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது.

212 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் சேர்த்திருந்தது. கீகன் பீட்டர்ஸன் 48 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று காலை பீட்டர்ஸனுடன், டூசென் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய பீட்டர்ஸன் 65 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அடுத்தடுத்து 3 விக்ெகட்டுகளை வீழ்த்தினால் இந்திய அணியின் பக்கம் வெற்றி வாய்ப்பு திரும்பும் என்பதால், பும்ரா, ஷமி, தாக்கூர் மூவரும் நெருக்கடி தரும்வகையில் பந்துவீசியும் இருவரையும் பிரிக்க முடியவில்லை. சதத்தை நோக்கி முன்னேறிய பீட்டர்ஸன் 82 ரன்னில் தாக்கூர் பந்துவீச்சில் போல்டாகினார்.

அடுத்துவந்த புமா, டூசெனுடன் சேர்ந்து அணியை ெவற்றிக்கு அழைத்துச் சென்றார். டூசென் 41 ரன்களிலும், புமா 32 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணித்த ரப்பில் பும்ரா, ஷமி, தாக்கூர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்