கேப் டவுன்: டிஆர்எஸ் முடிவில் எல்கருக்கு அவுட் இல்லை எனத் தெரிந்தவுடன் இந்திய அணியினர் விரக்தியிலும், கடும் மனஅழுத்தத்திலும் இருந்தது தெளிவாகத் தெரிந்தது என்று தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி தெரிவித்தார்
212 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க விளையாடி வருகிறது. மார்க்ரம் விக்கெட்டை இந்தியப் பந்துவீச்சாளர் ஷமி தொடக்கத்திலேயே வீழ்த்தினார். அடுத்தடுத்து இந்தியப் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுக்கும் விதத்தில் பந்துவீசினர்.
ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் அஸ்வின் வீசிய ஓவரை கேப்டன் டீன் எல்கர் எதிர்கொண்டார். அப்போது டீன் எல்கர் கால்காப்பில் வாங்கிய பந்துக்கு அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் நடுவரிடம் அப்பீல் செய்தனர்.
இதற்கு களநடுவர் எராஸ்மஸ் அவுட் வழங்கினார். ஆனால், கேப்டன் எல்கர் டிஆர்எஸ்முறையில் அப்பீல் செய்தார். இதை டிவி ஸ்க்ரீனில் பார்த்த நடுவர்கள் பந்து ஸ்டெம்புக்கு மேலே செல்லும் என்று கூறி அவுட் வழங்கியதை ரத்து செய்தனர். எல்கர் கால்காப்பில் வாங்கியது தெளிவாகத் தெரிந்தது, அவுட் என்பதும் தெளிவாகத் தெரிந்தது.
ஆனால், டிஆர்எஸ் முறையில் ரத்தானது இந்திய வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. களநடுவர் எராஸ்மஸ் “impossible” எனச் சொல்லி சிரித்துக்கொண்டார்.
இதையடுத்து, வீரர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஸ்டெம்ப்பில் உள்ள மைக்ரோஃபோனில் கேட்கும்போது, வீரர்கள் தங்கள் அதிருப்தியையும் இதில் பதிவு செய்தனர்.
இதில் உச்ச கட்டமாக கே.எல்.ராகுல் “11 வீரர்களுக்கு எதிராக ஒரு நாடே விளையாடுகிறது” என்றார். “ ஒளிபரப்பாளர்கள் இங்கே பணம் சம்பாதிக்கிறார்கள்,” என்று கோபத்தில் தெரிவித்தனர்
அஸ்வின் கூறுகையில் “ சூப்பர்ஸ்போர்ட் நிறுவனம் தென் ஆப்பிரி்க்க அணி வெற்றி பெறுவதற்கு வேறு ஏதாவது சிறந்தவழி இருக்கிறதா எனப் பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.
கேப்டன் கோலி ஸ்டெம்ப் மைக்ரோன் அருகே சென்று “ உங்கள் அணியில் கவனம் செலுத்துங்கள், எதிரணியின் மீது அல்ல. எல்லா நேரமும் எங்களை பின்தொடர முயற்சிக்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.
இந்திய அணியின் வீரர்கள் செயல்பாடு குறித்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
எல்கருக்கு அவுட் இல்லை என டிஆர்எஸ் முடிவில் தெரிந்தவுடன் இந்திய வீரர்கள் கடும் மனஅழுத்தத்துக்கு சென்றனர், விரக்தி அடைந்தது தெளிவாகத் தெரிந்தது. சில நேரங்களில் இந்த அழுத்தத்தை அணி தாங்கிக்கொள்ளும்.
ஆனால் இதுபோன்று அதிகப்படியான உணர்வுகளை ஒருபோதும் இந்திய அணியினர் வெளிப்படுத்தக் கூடாது.ஆனால், இந்திய வீரர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டனர் என்பது மட்டும் தெரிந்தது. அதிலும் இந்திய கேப்டன் ஸ்டெம்ப் அருகே சென்று பேசியது விரக்தியின் உச்சம். எல்கரும், பீட்டர்ஸனும் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தார்கள். அதை உடைக்க இந்தியப் பந்துவீச்சாளர்கள் தீவிரமாக முயற்சித்தார்கள். அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் அவர்களிடம் விரக்தி, அழுத்தத்தைக் காண முடிந்தது.
நாங்கள் டிஆர்எஸ் முறையை நம்புகிறோம். உலகின் பல நாடுகளில் டிஆர்எஸ் முறையோடுதான் விளையாடியிருக்கிறோம்.இது கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் ஒரு முறை. ஒவ்வொருவரும் கிரிக்கெட்டில் நேர்மையாகத்தான் விளையாடுகிறோம் என நான் நினைக்கிறேன்.
வெற்றி பெறுவதற்கு நல்ல பார்ட்னர்ஷிப் தேவை. நாளை பேட் செய்வதும் தென் ஆப்பிரிக்காவுக்கு எளிதானதாக இருக்காது, கடினமாகவே இருக்கும். இருப்பினும் சிறப்பாக ஆடி வெற்றி பெறுவோம் என நம்புகிறேன்
இவ்வாறு லுங்கி இங்கிடி தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago