சிறந்த நினைவுகளை திரும்பக் கொண்டுவரும் கேப்டவுன்: பும்ரா நெகிழ்ச்சி

By ஏஎன்ஐ

கேப்டவுன்: இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் நாளை மோதவுள்ள கடைசி மற்றும் 3-வதுடெஸ்ட் போட்டி நடக்கும் கேப்டவுன் மைதானத்தில்தான் 4 ஆண்டுகளுக்கு முன் பும்ரா டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினார். அந்த நினைவுகளை ட்விட்டரில் பும்ரா பகிர்ந்து நினைவு கூர்ந்துள்ளார். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. கேப்டவுனில் நாளை தொடங்கும் 3-வது டெஸ்ட் போட்டி யாருக்கு தொடர் என்பதை தீர்மானிக்கும்.

இந்திய அணிகேப்டவுன் டெஸ்ட் போட்டியில் வென்றால், தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற பெருமையும், கேப்டவுன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் வென்ற சிறப்பையும் பெறும். ஆதலால் இரு அணிகளின் ஆட்டமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தனது ட்விட்டர் ப க்கத்தில் பதிவிட்ட கருத்தில் “கேப்டவுன்-2018, டெஸ்ட் போட்டி வாழ்க்க இங்கிருந்தான் தொடங்கியது. 4 ஆண்டுகள் கடந்துவிட்டது, டெஸ்ட் போட்டி வீரராக வளர்ந்திருக்கிறேன், சிறந்த நினைவுகளை இந்த மைதானத்திலிருந்து எடுத்துச் செல்ல விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கத் தொடரில்தான் பும்ரா இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகி, கேப்டவுன் போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் டிவில்லியர்ஸ் உள்ளிட்ட பலரை ஆட்டமிழக்கச் செய்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்போது 3 போட்டிகள் கொண்ட தொடரில் பும்ரா 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக உருவாகியிருக்கும் பும்ரா வெளிநாடுகளில் மட்டும் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பும்ரா 26 டெஸ்ட் போட்டிகளில் 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் இதில் பெரும்பாலும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் கிடைத்த வெற்றிகள்தான் அதிகம். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் பும்ரா இதுவரை உள்நாட்டில் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்