புதுடெல்லி: இந்திய அணியில் மூத்த வீரர்கள் சத்தேஸ்வர் புஜாரா, ரஹானே இருவரும் ரன் ஸ்கோர் செய்யாவிட்டால் பயிற்சியாளர் திராவிட் யோசிக்காமல் அணியிலிருந்து தூக்கிவிட வேண்டும் என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் மூத்த வீரர், முன்னாள் கேப்டன், வெற்றிகரமான கேப்டன் என்ற அடையாளங்களுடன் வீரர்கள் அணியில் ஒட்டிக்கொண்டு இளம் வீரர்களின் வாழ்க்கைப் பாதையை அடைப்பது காலங்காலமாக நடந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது சத்தேஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே இருவரும் சேர்ந்துள்ளார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ரஹானே, புஜாரா இருவரையும் நீக்கிவிட்டு இளம் வீரர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
» ஃபார்மில் உள்ள ஸ்ரேயாஸ் அய்யர் ஒதுக்கப்படுவது ஏன்? விஹாரி ப்ளேயிங் லெவனில் தேர்வாகக் காரணமென்ன?
ரஹானே, புஜாரா இருவருக்கும் தென் ஆப்பிரிக்கத் தொடர்தான் திறமையை நிரூபிக்கவும், ஃபார்முக்குத் திரும்பவும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், முதல் டெஸ்ட்டிலும் இருவரும் தேறவில்லை, 2-வது டெஸ்ட்டிலும் இருவரும் சொதப்பினர்.
புஜாரா, ரஹானேவின் பேட்டிங் குறித்துப் பயிற்சியாளர் திராவிட் விரைவில் கடினமான முடிவை எடுக்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் அறிவுறுத்தியுள்ளார். நீண்டகாலத்துக்குப் பயிற்சியாளர் திராவிட் ஆதரவுடன் இருவரும் அணியில் நீடிக்க முடியாது, தேர்வாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு திராவிட்டுக்கு இருக்கிறது, திறமையான இளம் வீரர்கள் காத்திருக்கிறார்கள் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''ராகுல் திராவிட் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவில் இருந்தபோது, புஜாரா சிறப்பாக பேட் செய்து, இந்திய அணியில் திராவிட்டுக்கான 3-வது இடத்தைப் பிடிக்க கடும் நெருக்கடியை அவருக்கு அளித்தார். அதன்பின் அந்த இடத்தையும் புஜாரா பிடித்துக்கொண்டார்.
உண்மையில் வாழ்க்கை ஒரு வட்டம். அது இப்போது திரும்புகிறது. ரஹானே, புஜாரா தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிவரும் நிலையில், இருவருக்கும் எதிராகக் கடினமான முடிவுகளை திராவிட் எடுப்பார் என நான் நினைக்கிறேன். இருவரில் ஒருவர் அல்லது இருவருமே அணியிலிருந்து நீக்கப்படலாம். ஏனென்றால், புஜாரா, ரஹானே இருவருக்கும் நீண்ட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திராவிட் பயிற்சியாளராக வந்து சில மாதங்கள்கூட ஆகாத நிலையில் கடினமான முடிவுகளை எடுக்கத் தயங்குகிறார். அதனால்தான் போதுமான வாய்ப்புகளை இருவரும் வழங்குவார்கள் என்று காத்திருக்கிறார். அவர்களின் திறனையும், என்ன பங்களிப்பு அவர்களால் செய்ய முடியும் என்பதையும் கவனிக்கிறார்.
புஜாரா சதம் அடித்து 3 ஆண்டுகள் ஆகின்றன. அவருக்கு அதிகமான வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது அவருக்கே தெரியும். அதேபோல அணியில் ஏன் நீடிக்க வேண்டும் என்பதை நிரூபிக்க ரஹானேவுக்கும் ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டன. எம்சிஜியில் ரஹானே சதம் அடித்தபின் இரு அரை சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். கடந்த ஆண்டுகளாக ஒரு சதம்கூட அடிக்காமல் அணியில் நீடிக்கும்போதே தனக்கு ஏராளமான வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்பதை புஜாரா அறிவார்.
இருவருக்கும் வழங்கப்பட்ட நீண்ட வாய்ப்புகள் மெல்ல மெல்லக் கருகி, கடைசிக் கட்டத்தை நெருங்கிவிட்டன. இது இருவருக்கும் தெரியும் என்பது உறுதியாகக் கூறுகிறேன். ஏராளமான இளம் வீரர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களையும் பார்க்க வேண்டும். கோலி அணிக்குத் திரும்பினால், அணியிலிருந்து ஒரு வீரர் வெளியேற வேண்டும்''.
இவ்வாறு தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago