கூண்டிலிருந்து வெளியேறும் 2 புலிகள்: தோற்றாலும் இங்கிலாந்து பில்டப் குறையவில்லை

By ஏஎன்ஐ

சிட்னி: சிட்னியில் நாளை தொடங்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4-வது போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் மாற்றங்களுடன் களமிறங்குகின்றன. கூண்டிலிருந்து இரு புலிகள் வெளியேறுகின்றன என்று இங்கிலாந்து அணி தெரிவித்துள்ளது.

5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. 4-வது போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது.

ஏற்கெனவே தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றுவிட்டாலும் ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் தீவிரமாக இருந்து வருகிறது. அதே நேரம், அடுத்து வரும் இரு போட்டிகளையாவது வென்று சவாலாக இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணியும் போராடுகிறது. இதற்காக இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை அடுத்து, அவருக்கு பதிலாக உஸ்மான் கவாஜா சேர்க்கப்பட்டுள்ளார். ஜோஷ் ஹேசல்வுட் காயத்தால் அவதிப்பட்டதால் அவருக்கு பதிலாக வந்த ஜை ரிச்சார்ட்ஸனும் 100 சதவீதம் உடற்தகுதியுடன் இல்லை என்பதால், எம்சிஜி ஹீரோ வேகப்பந்துவீச்சாளர் போலந்து சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், ஹோபர்ட்டில் நடக்கும் கடைசி டெஸ்ட்டில் தன்னுடைய சொந்த மைதானத்தில் ஹேசல்வுட் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸி. ப்ளேயிங் லெவன்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னர், மார்னஸ் லாபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கெரே, மிட்ஷெல் ஸ்டார்க், நாதன் லேயன், ஸ்காட் போலந்து.

இங்கிலாந்து அணியில் ஒலே ராபின்ஸனுக்கு பதிலாக அனுபவ வீரர் ஸ்டூவர்ட் பிராட் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்டூவர்ப்ட் பிராட் அணிக்குள் வருவது நிச்சயம் பந்துவீச்சை பலமாக்கும். ஏற்கெனவே ஆன்டர்ஸன், மார்க் அவுட், ஸ்டோக்ஸ் ஆகியோர் இருக்கிறார்கள்.

இங்கிலாந்தின் உதவிப் பயிற்சியாளரும் முன்னாள் இடது கை பேட்டருமான கிரகாம் த்ரோப் கூறுகையில், "கூண்டில் அடைப்பட்ட இரு புலிகள் சிட்னி டெஸ்ட்டுக்குக் களமிறங்குகிறார்கள். பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் எனும் புலிகளைத்தான் குறிப்பிடுகிறேன். சிட்னி டெஸ்ட்டுக்காக கரோனா சூழலுக்கு மத்தியிலும் கடினமாகத் தயாராகியுள்ளோம். கரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் அதை நாங்கள் வெளிப்படுத்தவில்லை என்பதும் உண்மை. சிட்னியில் நல்ல ஆட்டத்தை ஆடுவதற்கான பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.

ஆஷஸ் தொடர் தொடங்கும் முன் பென் ஸ்டோக்ஸ் மீதான பிம்பம் ஊதிப் பெரிதாக்கப்பட்டது. ஆனால், 3 டெஸ்ட் போட்டிகளிலும் இதுவரை பந்துவீச்சு, பேட்டிங்கிலும் சொல்லும்படி செயல்படவில்லை. காலிப் பெருங்காய டப்பா என்று பென் ஸ்டோக்ஸை ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கிண்டல் செய்தது உண்மையாகி வருகிறது.

இங்கிலாந்து ப்ளேயிங் லெவன்: ஜோ ரூட் (கேப்டன்), ஹசீப் ஹமீது, ஜாக் க்ராளி, டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், மார்க் உட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆன்டர்ஸன், ஜேக் லீச்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்