ஃபார்மில் உள்ள ஸ்ரேயாஸ் அய்யர் ஒதுக்கப்படுவது ஏன்? விஹாரி ப்ளேயிங் லெவனில் தேர்வாகக் காரணமென்ன?

By க.போத்திராஜ்

ஜோகன்னஸ்பர்க்: ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் கோலிக்கு பதிலாக ஆட வேண்டிய ஸ்ரேயாஸ் அய்யரும் நீக்கப்பட்டு ஹனுமா விஹாரி ப்ளேயிங் லெவனுக்குள் வந்துள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம், அரை சதம் அடித்து ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யர் ஒதுக்கப்படுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

ஸ்ரேயாஸ் அய்யர் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். நேற்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளார், இன்று காலையில்கூட பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், டாஸ் போடப்படும் முன் கடைசி நேரத்தில் வயிற்றுக்கோளாறு எனக் கூறி ஸ்ரேயாஸ் அய்யர் நீக்கப்பட்டுள்ளார்.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர், உள்ளிட்ட வீரர்கள் சம்பா டியூனுக்கு நடனம் ஆடும் காட்சி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இன்று காலை வரை ஸ்ரேயாஸ் அய்யரால் பயிற்சியில்கூட ஈடுபட முடிகிறது. ஆனால், கடைசி நேரத்தில் அணிக்குள் தேர்வு செய்யப்படும்போது மட்டும் வயிற்றுவலி என்ற பிசிசிஐ கூறும் காரணம் எதைக் குறிக்கிறது எனத் தெரியவில்லை.

புத்தாண்டு நடனத்தில் ஸ்ரேயாஸ் அய்யர்

ஹனுமா விஹாரிக்கு உண்மையில் வாய்ப்பு வழங்க வேண்டுமென்று முடிவு செய்தால், செஞ்சூரியனில் சொதப்பிய ரஹானே, புஜாருவுக்கு பதிலாகக் களமிறக்கியிருக்கலாம். ஆனால், ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு அளிக்காமல் புறக்கணித்தது ஏன்?

வெறும் உடற்தகுதி மட்டும்தான் அணியில் இடம் பெறுவதற்கு அடிப்படை தகுதியாகப் பார்க்கப்படுகிறது என்றால், ஹர்திக் பாண்டியாவால் டி20 போட்டிகளில் 4 ஓவர்கள்கூட பந்துவீச முடியாத நிலையில் இருந்தார். ஆல்ரவுண்டர் என்ற முறையில் பிசிசிஐ தேர்வுக்குழு அவரைத் தொடர்ந்து தேர்வு செய்தது. அது உடற்தகுதியை அடிப்படையாக வைத்துதானா என்ற கேள்வி எழுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் ஃபார்மில் இல்லாமல் இருக்கும் ரஹானே, புஜாரா இருவரும் அணியில் நீடித்து வருகிறார்கள். ஆனால், கோலிக்கு பதிலாகக் களமிறங்க வேண்டிய ஸ்ரேயாஸ் அய்யர் கடைசி நேரத்தில் வயிற்றுக் கோளாறு என டாஸ் போடுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் பிசிசிஐ அறிக்கை வெளியிட்டு நீக்கியது ஏன்?

ஹனுமா விஹாரியை அணியில் சேர்த்ததில்கூட ஒரு நியாயம் இருக்கிறது. ஏனென்றால் இந்திய ஏ அணியோடு பயணித்த விஹாரி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகத் தொடர்ந்து 3 அரை சதங்கள் அடித்தார். அதனால் தென் ஆப்பிரிக்க மைதானம் பற்றி அனுபவம் இருக்கும் என்பதால் சேர்க்கப்பட்டார்.

நியூஸிலாந்துக்கு எதிராக சதம் அடித்து ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யர், ஏன் நீக்கப்பட வேண்டும். ரஹானே, புஜாராவுக்குத் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு, திறமையான வீரர்களுக்கான வாய்ப்பு மழுங்கடிக்கப்படுவது ஏன்?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்