கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு கரோனா: பிரெஞ்சு கோப்பை போட்டியில் பங்கேற்க மாட்டார்

By செய்திப்பிரிவு

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தொற்று காரணமாக நாளை நடைபெறவுள்ள பிரஞ்சு கோப்பை போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார்.

அர்ஜன்டினா கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி கடந்த ஆண்டு பார்சிலோனா அணியிலிருந்து விலகினார். பார்சிலோனா கால்பந்தாட்ட கிளப் அணியில் இருந்து அவர் கண்ணீர் மல்க விடைபெற்றார். ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் 21 ஆண்டுகளுக்கு பிறகு அவர் அந்த அணியிலிருந்து வெளியேறினார்.

இதனையடுத்து பிரான்ஸின் செயின்ட் ஜெர்மெய்ன் கிளப்பில் (பிஎஸ்ஜி) இணைந்தார். வேன்ஸ் அணிக்கு எதிராக பிரெஞ்சு கோப்பைப் போட்டியில் அவர் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு இன்று கரோனா தொற்று உறுதியானது.

இதனால் நாளை நடைபெறவுள்ள டை மேட்ச்சில் அவர் கலந்து கொள்ள மாட்டார். மெஸ்ஸியுடன் ஜூவான் பெர்னாட், கோல் கீப்பர் செர்ஜியோ ரிக்கோ, மிட் ஃபீல்டர் நாதன் பிடுமஸாலா ஆகியோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

பிரான்ஸில் தற்போது அன்றாடம் 2 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்